பக்கம்:கவிதை பயிற்றும் முறை.pdf/10

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ix கவிதை பயிற்றும் முறையைப்பற்றிப் பலவாறு சிந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. கல்வி உளவியல், பயிற்றும் முறை இவை பற்றிய பல மேனாட்டு நூல்களைப் பயின்று பல கருத்துகளை அறியவும், அவற்றைச் சிந்திக்கவும் ஒரு கட்டாயம் ஏற்பட்டது. சுற்றுப்பக்க ஊர்களிலுள்ள பல உயர்நிலைப்பள்ளிகட்கு பி. டி. பயிற்சிபெறும் மாணாக்கர்களை இட்டுச்செல்லும் பொழுதெல் லாம் பல தமிழாசிரியர்கள் கவிதை பயிற்றுவதை நேரில் காணவும் வாய்ப்புகள் கிடைத்தன. இந்த வாய்ப்புகளில் காரைக்குடி நகராண் மைக் கழக உயர்நிலைப் பள்ளித் தமிழாசிரியர் திரு. பூ அமிர்தலிங்கம் அவர்களும், பள்ளத்தார் உயர்நிலைப் பள்ளித் தமிழாசிரியர் திரு. முத்து வேங்கடாசலம் அய்யர் அவர் களும் கவிதை பயிற்றின முறை என உள்ளத்தைக் கவர்ந்தது. மனத்தில் இவற்றையெல்லாம் நிறுத்தி எழுதப்பெற்றதே இந் நூல். இது கவிதை அநுப்வம் (மே 1961) என்ற என் நூலின் மூன்றாவது பகுதியாக அமைந்திருந்தது. இப்போது இது தனி நூலாக உலவத் தொடங்கியுள்ளது. இதிலுள்ள கருத்துகள் கவிதை பயிற்றுவிப்பார்குப் பெருந்துணை புரியும் என்பது என் அதிராத நம்பிக்கை. இதனை அழகுற அச்சிட்டு உதவியவர் என் அருமை நண்பர் திரு. முஸ்தபா அவர்கள் (மீரா பெளண்டேஷ்ன், AE-103 அண் ணாநகர் சென்னை-40,அச்சக உரிமையாளர்). நல்ல தமிழறிஞர். இதனை அழகுறக் கட்டமைத்துக் கற்போர் கரங்களில் தவழச் செய்தவர் கந்தனடிமை எஸ். பி. சண்முகம் பிள்ளை அவர்கள் (Ganesh Printing and Binding 6. 3sSüsso G5G, GFsärsNasr -600 04 0 என்ற நிறுவனத்தின் உரிமையாளர்). இவர்கள் இரு வருக்கும் என் உளங்கனிந்த நன்றியைப் புலப்படுத்திக் கொள்ளு கின்றேன். நான் காரைகுடியிலிருந்துகொண்டு இந்நூலை எழுதிய போது ஓரிரண்டு ஆண்டுகளில் என்னை ஆட்கொள்ள இருந்த ஏழுமல்ையப்பன் கலைவாணியின் அருளாக இருந்து எனக்குத் துணை செய்தான் என்பது என் திடமான நம்பிக்சை. மணி வாசகப் பெருமான், அன்றே என்றன் ஆவியும் உடலும் உடைமை யெல்லாமும் குன் றே யனையாய்! என்னையாட் கொண்ட போதே கொண்டிலையோ?