பக்கம்:கவிதை பயிற்றும் முறை.pdf/102

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9 Ü கவிதை பயிற்றும் முறை என்னென்று கூறுவது? கரியகாட்டின் காட்சியை எப்படி எடுத்துக் காட்டுவது: கைநீட்டும் அலைகடலின் கவினை எங்ங்னம் கழறு வது? என்னே அண்டத்தின் அழகு! இவையெல்லாம் சேர்ந்த ஒன்றே இயற்கையன்னையின் அழகு வடிவம். அவ் வழகே அழியா அழகு. அதுவே முருகென்னும் பேரழகு”.* இத்தகைய இன்பத் தில் தோய்ந்த பழந்தமிழர்களின் பாடல்களே அவர்கள் கண்ட முருகன் உறையும் கோயில்களாகும். அக்கவிதைகளைப் படித்துத் துய்ப்பதே முருகனை வழிபடுவதாகும். இயற்கை அழகை வருணிக்கும் பாடல்கள்: தமிழ்மொழியில் இயற்கை அழகினை வருணிக்கும் எண்ணற்ற பாடல்கள் உள்ளன. பாரதியாரின் பாடல்கள் சிலவற்றைக் காண்போம். 'பாரடியோ வானத்திற் புதுமை யெல்லாம் பண்மொழி! கணந்தோறும் மாறி மாறி ஒரடிமற் றோரடியோ டொத்த லின்றி உவகையுற நவநவமாத் தோன்றுங் காட்சி; யாரடிஇங் கிவைப்போலப் புவியின் மீதே எண்ணரிய பொருள்கொடுத்தும் இயற்ற வல்லார்! சீரடியால் பழவேத முனிவர் போற்றும் செழுஞ்சோதி வனப்பையெலாம் சேரக் காண்பாய்.” "கணந்தோறும் வியப்புக்கள் புதிய தோன்றும்; கணந்தோறும் வெவ்வேறு கனவு தோன்றும்; கணந்தோறும் நவநவமாம் களிப்புத் தோன்றும்; கருதிடவும் சொல்லிடவும் எளிதோ? ஆங்கே. கணந்தோறும் ஒருபுதிய வண்ணங் காட்டிக் காளிபரா சக்திஅவள் களிக்கும் கோலம் கணந்தோறும் அவள் பிறப்பாள் என்று மேலோர் கருதுவதன் விளக்கத்தை இங்குக் காண்பாய். அடிவானத் தேயங்கு பரிதிக் கோளம் அளப்பரிய விரைவினொடு சுழலக் காண்பாய்; இடிவானத் தொளிமின்னல் பத்துக் கோடி எடுத்தவற்றை ஒன்றுபட உருக்கி வார்த்து, முடிவான வட்டத்தைக் காளி ஆங்கே, மொய்குழலாய், சுற்றுவதன் மொய்ம்பு காணாய்! வடிவான தொன்றாகத் தகடி ரண்டு வட்டமுறச் சுழலுவதை வளைந்து காண்பாய்.”* 12. திரு. வி. க. முருகன் அல்லது அழகு பக். 17-18 18. பாஞ்சாலி சபதம்-147, 148, 149,