பக்கம்:கவிதை பயிற்றும் முறை.pdf/103

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அழகும் உண்மையும் 9 | இவை பார்த்தன் பாஞ்சாலிக்குப் பரிதியின் எழிலைக் காட்டுவ தாக அமைந்த கவிதைகளாகும். தமிழ் எழுச்சி கரைபுரண் டோடும் இக்காலத்தில், வளர்பிறை போல் வளர்ந்த தமிழரில் அறிஞர் தங்கள், உளத்தையும், உலகில் ஆர்ந்த வளத்தையும் எடுத்துச் சொல்லால், விளக்கிடும் இயல் முதிர்ந்தும், வீறுகொள் இசை யடைந்தும் அளப்பிலா உவகை ஆடற் றமிழேநீ என்றன் ஆவி. என்று பாரதிதாசன் கூறுவதுபோல், தமிழ் மக்களுக்குத் தமிழே இன்று உயிர்போல் திகழ்கின்றது. இன்று தமிழ் இனத்தை ஒன்றுபடுத்துவதற்குத் தமிழ்மொழிபோல் வேறு சிறந்ததொரு சாதனம் இல்லை எனலாம். இன்று தமிழ்மக்கள், கன்னற் பொருள் தரும் தமிழே நீஓர் பூக்காடு; நானோர் தும்பி’’;" என்று கூறித் தமிழ்க் கவிதைகளைச் சுவைக்கத் தொடங்கி யுள்ளனர். இதன் விளைவாகத் தமிழ்நாட்டில் நடைபெறும் பல் வேறு இலக்கிய நிகழ்ச்சிகளில் கவியரங்கம்’ ஒரு முக்கிய கூறாக அமைந்திருப்பதைக் காணலாம். இந்த நிலையில் தாய்மொழி யாசிரியர்கள் கவிதையிலுள்ள அழகை எடுத்துக் காட்டி, அதன் மூலம் கவிதையிலுள்ள உண்மையினை உணரச்செய்வது எவ்வளவு இன்றியமையாதது என்பதைக் கூறவா வேண்டும்? 4. அழகின் சிரிப்பு, தமிழ்.செய், ! 15. டிெ செய் 10