பக்கம்:கவிதை பயிற்றும் முறை.pdf/105

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதையை மனப்பாடம் செய்தல் 9 3 களிலிருந்து ஒப்புமைப் பகுதிகளை நன்கு காட்டமுடிந்தது? கவிதைகளை நெட்ருடுச் செய்வதால் கவிதையின் பொருள் ஓரளவு மனத்தகத்தில் அமையினும், பின்னொருகால் அதனை நினைவு கூர்தலால் புதிய பொருள் நயங்களையும் உணர்ந்து புதிய சுவைகளைக் காணமுடிகின்றதை அநுபவத்தில் அறியலாம். இன்றும் பழைய முறைப்படி கல்வி கற்ற பெரும்புலவர்கள்தாம் கற்ற பல சுவையுள்ள பகுதிகளைக் நினைவுக்குக் கொணர்ந்து தாம் மகிழ்வதுடன் நம்மையும் மகிழ்விப்பதைப்போல் இக்காலத் தில் தேர்வு எழுதியவுடன் அனைத்தையும் மறந்து தாம் உயர்ந்த முறையில் கல்வி கற்றதாக நினைத்துக்கொண்டிருப்போர் மகிழ் விக்க முடியாத நிலையைக் காண்கின்றோமன்றோ? ஒருவருடைய அறிவும் திறனும் அவர் கற்றறிந்த பொருள் மிகுதிக்கேற்ப அமைந்து விளங்கும் என்பதை எடுத்துக்கூறத் தேவை இல்லை. 'கற்றனைத்து ஊறும் அறிவு” என்பது வள்ளுவம். அவ்வாறு கற்ற பொருள் மிகவும் சிறக்கவேண்டுமாயின், நினைக்கும்பொழுது அது மனத்திற்கு வரவேண்டும்; கன்னன் கற்ற வித்தைபோல், நினைவுக்கு வாராதிருந்தால் யாருக்குத்தான் என்ன பயன்? பல புதிய சொற்களையும், சொற்றொடர்களையும் அருங்கருத்துக் களையும் அறிந்துகொள்ளவும். அவற்றை மனத்தில் நிலை பெற்றிருக்கச் செய்யவும் நெட்டுருச் செய்தல் துணைசெய் கின்றது. கவிதைகளின் சந்தப்பொலிவும் ஒசை நயமும் உள்ளத் தில் பதிந்து மனக் காதில் ஒலித்துக்கொண்டிருப்பதால் அத் தகைய கவிதைகளை மேலும் கற்கவேண்டும் என்ற எண்ணம் எழும். நெட்டுருச் செய்தல் புதிய கவிதைகளை இயற்றுவார்க் குப் பெருந்துணையாக இருக்கும். கட்டளைக் கலித்துறை, வெண்பா, கலிப்பா முதலிய பலபாடல்களை நெட்டுருச்செய்தும் இசையோடு படித்தும் பழகிய ஒருவருக்கு அவற்றை இயற்றுதல் சீமைக்காரைச் சாலையில், வண்டியோட்டுவது போலாகும். அங்ங்ணமின்றி காரிகை கற்றுக் கவி பாடத் தொடங்கினால், "பேரிகை கொட்டிப் பிழைப்பது மேல்” என்பது தோன்றும்; அவ் வாறு கவிதை இயற்றுவோர் நாளொன்றுக்கு ஒன்று அல்லது இரண்டு கவிதைகளை யாத்தலும் அருமையாக முடியும். நடைமுறையில் நெட்டுருச்செய்தல்: கவிதைகளை மனப் பாடம் செய்வதால் பல நன்மைகள் உண்டாகின்றன என்பதை மேலே கண்டோம். மனப்பாடம் செய்வதை நடைமுறையில் 1 தமிழ்க் கடல் ராய. சொ. அவர்கள் திரு. வி, உலக ஊழியனார் அவர் கள், வேலூர் திரு எஸ். கே, இராமராசன் அவர்கள் போன்றோர் இதற்கு எடுத்துக் காட்டுகளாவர். இவ்வாசிரியர் அறியாத இன்னும் இத்தகையோர் பலர் இருக்கலாம்.