பக்கம்:கவிதை பயிற்றும் முறை.pdf/110

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

§ & கவிதை பயிற்றும் முறை வேண்டிய பகுதியையும் பொறுத்துள்ளது. பாடல்களின் பொருள் வெளிப்படையாகவும் மொழி நடை எளிதாகவும் இருந்தால் முதல் முறை சிறந்தது என்றும், பாடல்களின் பொருளும் மொழி நடையும் சற்றுக் கடினமாக இருந்தால் இரண்டாவது முறை சிறந்தது என்றும் சோதனைகள் காட்டுகின்றன. இதற்கு உள வியலார்காரணங்களும் விளக்கங்களும் தருகின்றனர். அவற்றை உளவியல் நூல்களில் கண்டு தெளிக" மேலும், உண்மையாகக் கற்றலில் மொத்தைப் பயிற்சி முறை அவ்வளவாக நற்பயன் விளைப்பதில்லை. தேர்விற்காகத் தொடர்ந்து படிக்கும் செய்தி கள் உடனே மறக்கப்பெறுதலே இதற்கு எடுத்துக்காட்டாகும். சில ஆராய்ச்சிகளின் முடிவுகள்: ஒரு பாடலை அல்லது பல பாடல்கள் அடங்கிய ஒரு பாடப்பகுதியை அப்படியே படித்து மனப்பாடம் செய்தல் எளிதா, அன்றி அதனைச் சிறுசிறு பகுதி களாகப் பிரித்துப் பாடம் செய்தல் எளிதா என்று ஆராய்ந்தும் முடிவு கண்டுள்ளனர். பொதுவாக, ஒரு பாடலை அல்லது பாடப் பகுதியை மொத்தமாக அப்படியே படித்தல் தான் சிறந்தது. ஒரு குறிப்பிட்ட எடுத்துக்காட்டில் இம்முறையின் பயன் மனப்பாடம் செய்வோரின் மனவளர்ச்சியையும், பாடப்பகுதியின் அளவையும் பொறுத்தது. பாடப்பகுதி மிக நீளமாக இராதிருந்தால் அதனை மொத்தமாக அப்படியே படித்தல்தான் சிறந்தது. பாடல்களில் சில அடிகள் கடினமாக இருப்பினும், பாடப்பகுதி மிக நீளமாக இருப்பினும் அல்லது சற்று கடினம்ாக இருப்பினும், அவற்றைப் பொருள் தொடர்பு கெடாத சிறுசிறு முழுப் பகுதிகளாக’ப் பிரித்துக்கொண்டு மனப்பாடம் செய்தல் சிறந்தது. கடினமாக வுள்ள பகுதிகளை மட்டிலும் ஏனையவற்றைவிட அதிகத் தடவை கள் திரும்பத்திரும்பப்படித்தால் போதுமானது. ஆனால், எப்படி பிரித்துக் கொண்டாலும் முதலில் சில தடவைகளும், இறுதியில் சில தடவைகளும் பாடல் முழுவதையும் அல்லது பாடப்பகுதி முழுவதையும் திரும்பத் திரும்பப் படித்தல் மிகவும் இன்றியமை யாதது. அன்றியும், பாடலை அல்லது பாடப்பகுதியை முழுப் பகுதியாக மனப்பாடம் செய்தலால் இன்னொரு நன்மையும் உண்டு. ஒரு பாடலை அல்லது பாடப்பகுதியைப் படித்த சிறுவன் கால இடையீட்டால் மறந்துவிட்டால், மீண்டும் அதனைப் படித்து மனப்பாடம் செய்துவிடலாம். இவ்வாறு இரண்டாம் முறை மனப்பாடம் செய்வதில்: ம்ொத்தைப் பயிற்சி முறையால் மனப்பாடம் செய்த கவிதைளைப் பங்கீட்டுப் பயிற்சி முறையால் மனப்பாடம் செய்த கவிதைகளைவிடக் குறைந்த தடவைகள் 14. Boaz G D: Educatinal Psyehology p d-168-769