பக்கம்:கவிதை பயிற்றும் முறை.pdf/111

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதையை மனப்பாடம் செய்தல் 93 திரும்பத் திரும்பப் படித்தல் போதும் என்றும் சோதனைகள் மூலம் கண்டறிந்துள்ளனர். இருத்துதலின் தத்துவம்: மனனம் செய்வதற்கென மேலே உரைத்த நிபந்தனைகள் யாவும் மனனம் செய்தவற்றை நினை வில் இருத்துதலுக்கு" மிகவும் முக்கியமானவை. இருத்துதல் மனிதருக்கு மனிதர் மாறுபடுகின்றது. ஒரு பாடலை மனத்தில் இருத்தும் திறன் அது மூளையில் விடும் துலங்கல் சுவடுகளைப் பொறுத்தது. மனத்தில் இருத்தப்பெறும் கவிதைகள் அங்கு மன நாட்டங்களாகப்" படிந்துள்ளன. இளமையில் நிகழ்ந்தவற்றை இப்பொழுது நினைவுகூர்வதிலிருந்து அவ்வதுபவங்கள் மனத்தில் இருத்தப் பெற்றுள்ளன என்பது திண்ணம். நாம் வழிபாட்டுப் பாடல்களைப் பல நாட்கள் சொல்லாவிடில் அவை மறைந்து போனவையாகத் தோன்றலாம். ஆனால், அவற்றை மூன்று அல்லது நான்கு முறை சொன்னவுடன் அவை மீட்டும் பாடமாகி விடுகின்றன; அவற்றை முன்மாதிரிப் பல தடவைகள் சொல்ல வேண்டியதில்லை. இதிலிருந்து முன்னநுபவங்கள் மனத்தில் ஒரு வாறு இருத்தப்பெறுகின்றன என்பது தெரிகின்றது. அநுபவங் களும் எண்ணங்களும் இயைபுற்று ஒன்றையொன்று நினைவூட்டு கின்றன. இத்தொடர்பு காலத்தையோ இடத்தையோ, காரண காரியத் தொடர்பையோ பொறுத்திருக்கலாம். புலன் உணர்ச்சியின் பயனாக மனத்தில் ஏற்படும் பல படிமங்களும்நினைவுச் படிமங்களும்’-நினைவூட்டத் துணை செய்கின்றன. படித்தவை எவ்வாறு இருத்தப்பெறுகின்றன என்பதுபற்றி உள வியலார் இன்னும் தெளிவுபடுத்தவில்லை; இன்றைய உளவிய லாராய்ச்சி அதற்குப் போதுமானதன்று. ஆனால், ஒன்று தெளி வாகி உள்ளது. நாம் நினைவுகூர்வதைவிட அதிகமாகவே மனத் தில் இருத்தியுள்ளோம். மனத்தில் இருத்தும் திறனும் நினைவு கூரும் திறனும் அளவில் வேறுபடுவதால், சிலர் மனத்தில் செய்தி கள் இருந்தும் நினைவுகூர முடிவதில்லை. நினைவு கூர்தல்: நினைவுச் செயலின் மூன்றாவது கூறு நினைவு கூர்தல்' அல்லது மீட்டும் வருவித்தல் ஆகும். நினைவு கூர்தலும் மீட்டறிதலும் நினைவு வைத்தலின்'" இரு வழி களாகும். நினைவுகூர்தல் என்பது, பொருள் புலன்களுக்கு முன் 15. g(5ğiği 5& - Retention 16. to sur 5 ri' l-ih - Disposition 17. நினைவுச் படிமங்கள். Memory images18. நினைவு கூர்தல் - Recall, 19. if C-L-go go - Recognition 29, st &ogrsos so su # # # - Remembering