பக்கம்:கவிதை பயிற்றும் முறை.pdf/112

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 CG கவிதை பயிற்றும் முறை இல்லாத பொழுது நினைவில் வைத்தல்; மீட்டறிதல் என்பது, பொருள் புலன்களுக்கு முன் இருக்கும்பொழுது நினைவில் வைத் தல். மனத்தில் இருத்துதல் இன்றேல் நினைவுகூர்தல் சாத்திய மில்லை. மனத்தில் இருப்பவற்றை நினைவுகூர முடியாத நிலையை நினைவுகூர் மறவி' என்றும், நினைவில் இருத்துதலி லேயே குறையிருப்பின் அது நினைவிலிருத்தல் மறவி' என்றும் உளவியலார் வழங்குவர். குறுக்கீடு நினைவின் தடை: நினைவுகூர்தல் செயல் நடை பெறும் பொழுது ஏதாவது குறுக்கீடு ஏற்பட்டுத் தடை நிகழ் கின்றது. இந்தக் குறுக்கீடு அச்சம், கவலை, தன் உணர்ச்சி போன்ற உள்ளக் கிளர்ச்சிபற்றியவைகளால்தான் நிகழும். அவைக்கூச்சம் பலரிடம் இருப்பதை நாம் அறிவோம்; இதன் காரணமாக நாம் தெரிந்தவற்றையே நினைவுகூர முடிகின்றதில்லை யன்றோ? நினைவுகூரத் தவறுவதற்கு வேறொரு காரணமும் உண்டு. இதைத் தொடர்புள்ள குறுக்கீடு’’’ என வழங்குவர் உளவியலார். ஒரு வினா விடுக்கப்பெறுங்கால் கடந்த கால அநுபவத்தில் வேறொன்றும் கிளர்ந்தெழுதல் கூடும். இதற்கும் சரியான விடைக்கும் இடையே ஒரு போராட்டம் எழுவதால் நினைவுகூர் தலில் தடை நிகழ்கின்றது; இயலாததாகவும் ஆகின்றது. என்ன தான் முயன்றாலும் நினைவு கூரவே முடிகின்றதில்லை. மேலும், நினைவுகூர்தல் அப்போதைய நம் மன நிலையையும் பொறுத் துள்ளது. எனவே, நினைவுகூர வேண்டும் என்ற மனவுறுதி மிகவும் முக்கியமானது. செய்யுட்களிலுள்ள அந்தாதித் தொடை, எதுகை, மோனை, ஒலிநயம் முதலியவை நினைவுகூர்வதற்குரிய நினைவுக் குறிப்புகளாக' உதவுகின்றன. நாலாயிரத்திவ்விய பிர பந்தத்தில் பதிகங்கள் தோறும் காணப்பெறும் அடிவரவு ஒரு வகையான நினைவுக் குறிப்புகளாகும். கெட்டுருச் செய்யவேண்டிய கவிதைகள்: மாணாக்கர்கள் நெட்டுருச் செய்யவேண்டிய,கவிதைகள் அவர்களுடைய ஒழுக்கம், உளப்பண்பு. கற்பனையாற்றல், கருத்துவளம், முருகுணர்ச்சி முதலியவற்றை வளர்க்கத் தக்கனவாக இருத்தல்வேண்டும். மலை, கடல், நாடு, வளநகர் பருவம், இருசுடர் தோற்றம் முதலியவற்றை வருணித்துக் கூறும் பகுதிகள், சொல்நயம், 21. st&ograļđa i un psß-Recaif amnesia 22. jä «d&r¢â& &g5š gš» tg 39«ă - Rentetiomamnesia 28. 6 # r t-ữtịdrer Gyả #6 - Associative interference 24. நினைவுக் குறிப்பு - Cue