பக்கம்:கவிதை பயிற்றும் முறை.pdf/115

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதையை மனப்பாடம் செய்தல் 103 இம்மையே, எழுமை நோய்க்கும் மருந்தினை, இராமன்’ என்னும் செம்மைசேர் நாமம் தன்னை, கண்களில் தெரியக் கண்டான்.” விரிவஞ்சி இத்துடன் நிறுத்துகின்றோம். சங்க இலக்கியங்கள், காவியங்கள், புராணங்கள், பிள்ளைத்தமிழ் நூல்கள், சில்லறைப் பிரபந்தங்கள் போன்ற நூல்களிலிருந்து பல பாடல்களை எடுத்துக் காட்டலாம். பாடல்களைத் தொகுத்து வைக்கும் முறையைப் பற்றி இந்நூலில் பல இடங்களில் வற்புறுத்தியுள்ளோம். இத்த கைய பழக்கத்தை மாணாக்கர்களிடம் வளர்த்துவிட்டால், அவர் கள் தம் பாடநூலில் வருவனவற்றையும் பிற இலக்கியங்கள், பருவ இதழ்கள், நாளிதழ்கள் முதலியவற்றில் காணப்பெறுபவை க ளு ள் த ம் மனத்தை ஈர்க்கக் கூடியவற்றையும் தொகுத்து வைத்துக் கொள்வர். இவ் வா று செய்யாது தேர்வைக் கருதி எல்லோரையும் ஒரு குறிப்பிட்ட பகுதியை நெட்டுருச் செய்யும் படி வற்புறுத்துவது நன்றன்று; தேர்வினால் பாநயக்கும் பண் பினை அளந்தறிய எண்ணுவதும் சரியன்று; அஃது இயலாதது மாகும். அங்ங்னம் தேர்வால் அளந்தரிய விரும்பினால் தேர்வு முறையை மாற்றியமைத்துக் கொள்ளவேண்டுமே யன்றி. முறையை வகுத்துக் கொண்டு அதற்கேற்றவாறு பாடல்களை நெட்டுருச்செய்யவேண்டுமென்று வ ற் பு று த் து வ து மிகக் கொடுமை; அது கவிதைச் சுவையைக் கொல்வது போலாகும். மனப்பாடம் செய்தலை இளமையிலிருந்தே தக்க முறையில் வளர்த்தால் சிறுவர்களிடம் மொழிவளம் பெருகும். இலக்கியத் தில் ஆர்வமும் கிளர்ந்தெழும். சிறுவர்களின் இயல்பறிந்து ஆசிரி யர்கள் அதனை திறம்பட வளர்க்க வேண்டும். - 82. கிட்கிந் வ: லிவதை, 77.