பக்கம்:கவிதை பயிற்றும் முறை.pdf/116

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இயல்-10 நான்கு யோசனைகள் கவிதைகளைப் படித்துத் துய்க்க விரும்புபவர்கட்கும், குறிப் பாக மாணாக்கர்கட்கும் சில யோசனைகளைக் கூற விரும்பு கின்றோம். இவை கவிதை பயிற்றும் ஆசிரியர்கட்கும் பெருந் துணையாக இருக்கும். அவற்றை ஈண்டு ஒவ்வொன்றாகக் கூறுவோம். 1. செய்யுளிலக்கணம்: செய்யுளின் அமைப்பைக் கூறும் யாப்பிலக்கணத்தைநன்கு தெரிந்துகொண்டால்தான் கவிதையை நன்கு அநுபவிக்கலாம் என்பதில்லை. ஆற்றல் இருப்பவர்கள் தெரிந்துகொள்ளலாம். தெரிந்துகொண்டுதான் ஆகவேண்டும் என்ற கட்டாயம் இல்லை. கவிதையை அநுபவிப்பதற்குத் தேமாவும் புளிமாவும், தேமாங்காயும் புளிமாங்காயும் எந்த அளவுக்குத் துணைபுரிதல் கூடும் என்பது இந்த ஆசிரியருக்குத் தெரியவில்லை; எதுகையும். மோனையும், திரும்பத் திரும்ப வரும் ஒலியமைப்பு முறையும் கவிதையை இசையூட்டிப் படிப் பவர்கட்கு இன்பம் பயக்கின்றன என்பது உண்மைதான். அவை மகிழ்ச்சியூட்டுகின்றன என்பதற்கும் தடையில்லை. ஆனால், இவற்றின் இலக்கணம் எத்துணை அதற்குப் பயன்படும் என்பது தான் நம்முடைய வினா, கீழ் வகுப்பு மாணாக்கர்களும், கவிதையைத் துய்ப்பதில் தொடக்க நிலையிலுள்ளவர்களும் கவிதையின்ஒவ்வொரு வரியின் ஒலிப்பையும் நன்கு அறிதல் வேண்டும். அவர்களது கவனத்தை இந்தக் கூறுக்கு ஈர்த்தால் அதுவே போதுமானது. காலமாம் வனத்திலண்டக் கோலமா மரத்தின் மீது காளிசக்தி யென்றபெயர் கொண்டு-ரீங் காரமிட் டுலவுமொரு வண்டு-தழல் காலும்விழி நீலவன்ன மூலஅத்து வாக்களெனும் கால்களா றுடையதெனக் கண்டு-மறை காணுமுணி வோருரைத்தார் பண்டு.” 1 செய்யுளிலக்கணம்-Prosody. 2. பாரதியார் கவிதைகள்.மகா காளியின் புகழ். 1.