பக்கம்:கவிதை பயிற்றும் முறை.pdf/13

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இயல்-1 மொழிப்பாடத்தில் கவிதை கல்வியைப்பற்றியும் நடைமுறைக் கல்வியைப்பற்றிப் பலர் கூறும் கருத்துகளைப்பற்றியும் நாம் சிந்தித்தால், இரண்டிலும் உள்ள குறைகள் ஒரே காரணத்தல்ை எழுகின்றன என்பதை அறிவோம். கற்பித்தலில் நேரிடும் கேடுகள் 'கல்வி முழுவதிலும் பரவுகின்றன; பல அறிஞர்கள் கல்வியைப்பற்றிக் கூறும் குறை கள் யாவும் கற்பித்தலிலிருந்தே எழுகின்றன. பெரும்பாலான ஆசிரியர்கட்குக் கற்பித்தலில் தம்முடைய நோக்கம் என்ன என் பதைப்பற்றித் தெளிவான கருத்தே இருப்பதில்லை: தாம் மேற் கொள்ளும் முறைகளும் சரியானவைதாமா என்பதுபற்றியும் அவர்களிடம் தெளிவான எண்ணம் இல்லை. பல்வேறு தவறுகள்: ஆனால், கல்வியைப் பற்றித் திறனாய்ந்து குறைகளை எடுத்துக் காட்டுவோரிடம் திட்டமான கருத்துகள் உள்ளன: கல்வியால் என்ன விளைய வேண்டுமென்று அவர்கள் எடுத்துக்காட்டிக், கற்பிக்கும் ஆசிரியர்களையும் தேர்வுகளில் வெற்றியடைந்து வெளிவரும் மாணாக்கர்களையும் குறை கூறு கின்றனர். ஆனால், பெரும்பான்மையான திறனாய்வாளர்கள்’கல்வியைப்பற்றிக் குறைகூறுவோர் - ஆசிரியர்களைப்போலவே குறைகளையுடைவர்கள்! அவர்கள் ஓர் உண்மையைச் சரியாகப் புரிந்து கொள்வதில்லை. கல்விக்குப் பொறுப்புள்ளவர்கள் ஆசிரியர்களைச் செய்யும்படி ஏவுவது ஒன்று; இத் திறனாய் வாளர்கள் ஆசிரியரிடம் எதிர்பார்ப்பது பிறிதொன்று. கல்வியை இயக்குவோர் ஒன்றுகூற, இத்திறனாய்வாளர் வேறொன்றை எதிர்பார்த்தால் ஆசிரியர்கள் என்ன செய்ய முடியும்? தம்முடைய நோக்கம் யாது என்பதுபற்றித் தெளிவாக அறிந்து கொள்ளாத ஆசிரியர்களும் தவறுகின்றனர்; ஆசிரியர்களின் நோக்கம் யாதாக இருக்க வேண்டும் என்பதைப் புரிந்து கொள்ளாத திறனாய் வாளர்களும் தவறு இழைக்கின்றனர். தாம் செல்ல வேண்டிய திசையை அறியாது ஆசிரியர்கள் சென்று கொண்டேயிருந்தால், அவர்கள் சரியான இடத்தை அடைவது எங்ங்னம்: ஆசிரியர்கள் எத்திசையில் செல்ல வேண்டும் என்பதுபற்றிப் புரிந்து கொள் 1. *sūsà - Education. 2 திறனாய்வாளர் Critic க-1