பக்கம்:கவிதை பயிற்றும் முறை.pdf/130

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

f 18 கவிதை பயிற்றும் முறை நாட்டின் பண்பாட்டிற்கு இன்றியமையாதது என்பதை நாம் உண்மையாகவே கருதினால், சிறுவர்களிடம் தொகை நூல்' வளர்க்கும் பழக்கத்தில் மொழியாசிரியர்கள் அதிகக் கவனம் செலுத்தவேண்டும். கவிதைச் சுவையில் ஈடுபடும் பழக்கம் மாணாக்கர்களிடம் நன்கு அமைந்துவிட்டால் அவர்கள் வாழ்க்கைத் துறையில் நுழைந்த பிறகும், வேலையிலிருந்து நீங்கி ஒய்வுபெறும் காலத்திலும், முதுமை காரணமாக அவலக் கவலை யாலும் தளர்ச்சியாலும் துன்பப்படும் காலத்திலும் இக்கவிதைச் சுவை அவர்களிடம் இளமையுணர்ச்சியையூட்டுவதுடன் மட்டில் லாத மகிழ்ச்சியையும் அளிக்கும். அன்றியும், இவ்வுலக வாழ்வில் வயிற்றுப் பிழைப்புக்காகப் பல துறைகளில் கிடந்துழன்று உழைத்து அலுத்துப்போகும்போது ேதா ன் ற க் கூடிய வெறுப்பை இக்கவிதை இன்பம் போக்கிவிடும்; அன்றாட வாழ்க் கையில் நேரிடக் கூடிய ஏமாற்றங்களையும் இடர்ப்பாடுகளையும் இன்பமாக ஏற்றுக்கொள்ளவேண்டும் என்ற உண்மையை இக் கவிதைகள் நமக்கு அடிக்கடி நினைவூட்டும். நன்றாங்கால் நல்லவாக் காண்பவர் அன்றாங்கால் அல்லற் படுவது எவன்?* என்பன போன்ற பொன்மொழிகள் மன அமைதிக்குச் சிறந்த மருந்துபோல் உதவும். மொழியாசிரியர்கள் மனம் வைத்தால் முடியாதது ஒன்றும் இல்லை. கல்வி முடிந்து மாணாக்கர்கள் மொழியாசிரிடமிருந்து விடை பெறுங்கால் ஒவ்வொவரிடமும் உயர் கவிதைகள் அடங்கிய தொகைநூல் ஒவ்வொன்று இருக்கும்; இந்நூல் அவர்களிடம் என்றும் நிலைத்து வாழும்; அதிலுள்ள கவிதைகள் அவர்களின் அன்றாடத் தேவைக்குப் பெரிதும் உதவும். இக் கவிதைகளைப் புரட்டும்பொழுதெல்லாம் அவர்கட்குத் தம்முடைய ஆசிரியரின் நினைவு எழும். அக் கவிதைகளைப் படித்துச் சுவைக்கும்பொழு தெல்லாம் அக்கவிதைகளினியிடையே தமக்குத் தோன்றாத் துணையாக இருந்த ஆசிரியரின் குரலும்ஒலிக்கும். வறுமையாலும் பிற தொல்லைகளாலும் துன்புறும் ஆசிரியருக்கு இதைத் தவிர ஆறுதல் அளிக்கக்கூடியது வேறு என்ன உள்ளது? 16 குறள்:8794