பக்கம்:கவிதை பயிற்றும் முறை.pdf/14

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. கவிதை பயிற்றும் முறை ளாமலேயே, அவர்கள் ஒரு குறிப்பிட்ட இடத்தை அடைய வில்லையென்று குறைகூறும் திறனாய்வாளர்களைப்பற்றி நாம் என்ன சொல்வது என்பதுதான் தெரியவில்லை. எல்லாம் காலத் தின் கோலம்; குடியரசு முறை'யால் விளையும் அற்புதங்கள்’! யார் எதை வேண்டுமானாலும் சொல்லலாம் என்பதால் ஏற் படும் விளைவுகள்: ஒவ்வொரு துறையைப்பற்றியும் அத்துறை வல்லுநர்களே எதையும் கூறுவதற்கு உரியவர்கள் என்ற நியதி இருந்தால் இத்தகைய வேண்டாத கருத்து வேறுபாடுகள் எழு வதற்கு வாய்ப்புகளே ஏற்படா. மருத்துவத்துறை, பொறியியல் துறை, வேறு பல துணுக்கமான துறைகளில் நடைபெறும் வேலை துணுக்கத்தைப்பற்றி அத்துறைகளைச் சாராதவர்கள் எதையும் சொல்வதில்லை. அவற்றில் குறை கூறவும் அவர்கட்குத் தெரி யாது. ஆனால் கல்வியைப்பற்றி எவரும் எதை வேண்டுமானா லும் கூறுகின்றனர். இதற்குக் காரணம் என்ன? பெரும்பாலான ஆசிரியர்கட்குத் தம் துறையில் அதிக நமபிக்கை இல்லை. கல்வித் துறையில் தொழில் நுட்பம் எத்துணையளவு ஆராய்ச்சிகளால் வளர்ந்துள்ளது என்பதை அறிந்து கொண்டு அதற்கேற்றவாறு தாம் எங்கனம் பணியாற்ற வேண்டும் என்பதை அவர்கள் புரிந்து கொள்வதே இல்லை. இந்நிலையால்தான் கல்வித்துறையில் சொல் லொணா அவலநிலை ஏற்பட்டுள்ளது; ஏற்பட்டும் வருகின்றது. பாடத்திலும் குறிக்கோள் நிலை: ஒரு பாடம் கல்வி ஏற் பாட்டில்" ஏன் சேர்க்கப்பெறல் வேண்டும் என்பதை ஆசிரியர் க்ள் அறிந்து கொள்ள வேண்டியது மிகவும் இன்றியமையாதது. எய்த வேண்டிய முடிவினைத் தெளிவாக அறிந்து கொண்டால்தான் அதற்கேற்றவாறு கற்பித்தலைத் தாம் உருவாக்க முடியும். குழந்தையின் கல்வியில் ஒரு பாடம் எவ்வாறு வளர்ச்சிபெறுதல் வேண்டும் என்பதை ஆசிரியர்கள் அறிந்து கொள்ளாதவரையில் தாம் என்ன செய்ய வேண்டும் என்பதை ஆசிரியர்கள் புரிந்து கொள்ளாத வரையில், அவர்கள் நடைமுறையிலுள்ள கல்வி ஏற்பாட்டைக் கொண்டுசெலுத்த முடியாது. ஆனால், 'முடிவு குறிக்கோள் நிலையில்" இருந்து அதை என்றுமே அடைய (Lploயாதிருந்தால், என்ன செய்வது?’ என்று சிலர் வினவலாம். நாம் அடைய வேண்டிய முடிவுகள் யாவும் குறிக்கோள் நிலை யில்தான் இருத்தல் வேண்டும். மானிட இனத்தின் சிறந்த பகுதியினர் யாவரும் அடைய முடியாத குறிக்கோள்களை 8. us L-th-Subject 4 • s sð sig 57góu r G- Curriculum. 5 - e ##3 * r sử #soso-ldeaỉ leveỉ.