பக்கம்:கவிதை பயிற்றும் முறை.pdf/17

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மொழிப்படத்தில் கவிதை 5 அடைந்தவர்களாவர். இவர்கள் வாழ்க்கையில் புகுந்து நாட்டிற் கும் சமூகத்திற்கும் சிறந்த பணியாற்றி உயர்ந்த குடிமக்களாகத் திகழ்வர். நாம் வாழும் இவ்வுலகினைத் திரும்பப் படைத்து விடு வர். முருகுணர்ச்சி பெற்ற குடிமக்கள் நம்முடைய நகர்ப் புறங் களில் காணும் அருவருக்கத்தக்க காட்சிகளைக் காண்பதற்குச் சகியார். தீயநாற்றம் வீசும் சாய்க்கடைகள், தூசுகளும் புழுதி களும் எழுப்பும் தெருக்கள், குப்பைக் கூளங்கள் நிறைந்த அங்காடி வீதிகள், காணவும் சகிக்க முடியாத வறியர் வாழும் குடிசைகள் இவர்கள் கவனத்தைப் பெற்றுச் சிறப்படையும்; இவர்கள் நகர்த் தந்தையர்கள்ாகத் தேர்ந்தெடுக்கப்பெறுங்கால், நகரங்களைப் பல்லாற்றானும் ஒல்லும் வகையில் வனப்புடையதாகச் செய் வர் கண்டோர் மகிழும் வண்ணம் கவின்பெறச் செய்து விடுவர். மக்கள் தக்க கல்வியைப் பெற்றால்தான் சமூகம் சிறந்த முறையில் முன்னேற்றம் அடையும் என்பதைச் சமூகச் சீர்திருத்த வாதிகள் முழு மனத்துடன் ஒப்புக்கொள்வர். தாம் என்னதான் பாடுபட்டாலும் மக்கள் தக்க கல்வி பெறாவிடின், தம் தொண் டால் நற்பயன் விளையாது என்பதை இவர்கள் நன்கு அறிவர். புறநிலையில் காணும் கூறுகளைச் சீர்திருத்தம்செய்யவேண்டியது மிகவும் இன்றியமையாதது என்றிருந்த போதிலும், அகக்கூறு களைத் திருத்தவேண்டியது அதனைவிட முக்கியமானது. நகர்ப் புறங்களை வனப்பாகச் செய்வதைவிடக் குடிமக்களின் மனத்தை-உள்ளத்தை-விழுமியதாகச் செய்வது முதலில் வேண்டப் பெறுவது. கவினைக் காணும் மனப்பான்மையையும் வனப்பை விழையும் உள்ளத்தையும் மக்களிடம் வளர்த்துவிட் டால் அனைத்தும் சீர்படும். ஒரு சமூகத்தினரிடையே உடல் தூய்மையையும், எண்ணத் தூய்மையையும், செயல் தூய்மையை யும் ஏற்படுத்துவதென்பது குதிரைக் கொம்பு, நம்மால் செய்ய முடியாதது. ஆனால், அச்சமூகத்தினரிடையே இத்தகைய கூறு களில் நல்ல மனப்பான்மையை உருவாக்கக்கூடுமாயின், அவர் கள் அழகிற்குப் புறம்பானவற்றையெல்லாம் வெறுத்தொதுக்கு வர்; அருவருக்கத் தக்கனவற்றைக் கண்டு பொறுக்கவும் மாட் டார்கள். மானிட வாழ்க்கை மேம்பாடு எய்த வேண்டுமாயின் குழந்தைகளிடம் முருகுணர்திறனை - அழகு நலம் பாராட்டும் பண்பை-வளர்த்தல் வேண்டும். இத்தகைய முருகுணர் திறனை வளர்க்கும் பாடக்குழுவில் கவிதையும் ஒன்று. கவிதையின் முக்கிய நோக்கம் இத்தகைய முருகுணர்திறனை வளர்ப்பதேயாகும். இக்காரணம்பற்றியே கவிதை கல்வி ஏற்பாட்டில் இடம் பெறு