பக்கம்:கவிதை பயிற்றும் முறை.pdf/19

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இயல்-2 கற்பிப்பவர் தகுதி ஆசிரியர்களைப்பற்றிப் பொதுவாக ஆன்றோர்கள் குறிப் பிட்டவை அனைத்தும் கவிதை கற்பிக்கும் ஆசிரியருக்கும் பொருந்தும். நல்லாசிரியரின் இயல்பை நன்னூல், குலனருள் தெய்வம் கொள்கை மேன்மை கலை பயில் தெளிவு கட்டுரை வன்மை நிலம்மலை நிறைகோல் மலர்நிகர் மாட்சியும் உலகியல் அறிவோடு உயர்குணம் இணையவும் அமைபவன் நூலுரை யாசிரி யன்னே" என்று குறிப்பிடும், நல்லாசிரியரை நிலம், மலை, துலாக் கோல் மலர் ஆகியவற்றுடன் ஒப்பிட்ட காரணத்தையும் விளக்குவர் ஆசிரியர்". பயிற்றும் முறைகளைக் கூறும் மேனாட்டு நூல்களும் நல்லாசிரியரின் தன்மைகளை நன்கு விரித்துரைக்கின்றன. இக் கருத்துகள் யாவற்றையும் கவிதை கற்பிக்கும் ஆசிரியர்கள் நன்கு சிந்தித்து உணர்தல் வேண்டும். இவை ஒரு புறமிக்க அடியிற்கூறுபவை மிக மிக இன்றியமையாதவை. கவிதைகளை உணரும் கிலை: தேர்வுகள் எழுதிப் பல பட்டங் களைப் பெற்றுவிட்டால், கவிதை கற்பிக்கும் தகுதி தமக்கு வந்து விட்டது என்று ஆசிரியர்கள் கருதுவது தவறு. தேர்வு எழுதித் தகுதி பெறும் நிலை வேறு; கவிதைகளை உணரும் நிலை வேறு. கவிதைகள் யாவும் அவற்றை யாத்த கவிஞனின்உணர்ச்சிப் பெருக் கைக் காட்டுபவை. எனவே, கற்பிக்கும் ஆசிரியர்கள் தாம் கற்பிக் கும் கவிதைகளை உணர்ந்து பயின்றிருத்தல் வேண்டும்; பயின்று கொண்டே இருக்கவும்வேண்டும். இவ்வாறு பயின்றால்தான் மின் னாற்றல் குறைந்த மின்கலம் (Battery) மீண்டும் மின்னாற்றா லைப்பெறுவதுபோல், ஆசிரியர்களும் புதிய உணர்ச்சி பெருக்கைப் பெற்றுக்கொண்டேயிருப்பர். கவிதைகள் வெறும் செய்திகளைக் கூறுபவை மட்டும் அன்று. இவற்றை இவை உணர்ச்சி கலந்து தரு கின்றன என்பதை நாம் உணர்தல் வேண்டும். எனவே, கவிதை 1. நூற்-26 2. நூற்பாக்கள்.27,28,29,30. 8. Bossing: Progressive Methods of Teaching in Secondary Schools Chap.?