பக்கம்:கவிதை பயிற்றும் முறை.pdf/26

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 கவிதை பயிற்றும் முறை ஆற்றலும் அவர்கள் கையில்தான் உள்ளது. அவர்கள்தாம் அதனைச் சரியாக உணர்தல் கூடும். அந்தப் பொறுப்பினை அவர்கள் நன்கு உணர்வார்களாயின், அது சுமக்க முடியாத அளவுக்குப் பெரிதாக இருப்பது தெரியவரும். கற்பித்தல் என்பது ஒருவரது பணியின் ஆற்றலையும் சாத்தியப்படக் கூடியதையும் காட்டுவதைப்போலவே, அவரது சிறுமையையும் எடுத்துக் காட்டவல்லது. தாம் என்ன செய்யலாம் என்பதையும் தம்மால் என்ன செய்யமுடியும் என்பதையும் ஆசிரியர் காணும்பொழுது, அவர் தம்முடைய சுவட்டிலேயே, தாம் வகுத்துக் கொண்ட துறையிலேயே, சிலர் மிகப்பெரிய நிலையை எய்துகின்றனர் என்று காண்பார்; தம்முடைய ஆற்றலையெல்லாம் கொட்டி ஒரு பாடத்த்ை முடித்தபிறகு தாம் காண்பதைப்போன்ற பெரு மிதத்தை வேறு எப்பொழுதும் அவரால் காணமுடிகின்றதில்லை. அவரிடம் பாடங்கேட்ட சிறுவர்கள் பள்ளியை விட்டு வெளிச் செல்லுகின்றனர்; ஆசிரியரும் சாதாரணமனிதராகி விடுகின்றார். ஆனால், அந்த ஒரு மணி நேரமாவது தம் வாழ்க்கை முழுத் தன்மை எய்தியது என்ற உணர்ச்சி அவரிடம் கட்டாயம் இருக் கத்தான் செய்யும். ஆசிரியத் தொழிலில் இல்லாதவர்களும் இத் தகைய பேரின்பத்தை அடையும் வாய்ப்பு உண்டு. ஒரு நல்ல கவிதையைப் படித்து அதன் சுவையை அநுபவித்தவர்களும், அந்தக் கவிதையைப் படித்த ஒரு சிறிய கால அளவிலாயினும் தம்முடைய வாழ்க்கை முழுத்தன்மை எய்தியது என்பதை உணர் வர். எடுத்துக்காட்டாக, எள்ளத் தனைவந் துறுபசிக்கும் இரங்கிப் பரந்து, சிறுபண்டி எக்கிக் குழைந்து, மணித்துவர்வாய் இதழைக் குவித்து விரித்தழுது, துள்ளித் துடித்துப் புடைபெயர்ந்து, தொட்டில் உதைத்து, பெருவிரலைச் சுவைத்துக் கடைவாய் நீர்ஒழுகத் தோளில் மகரக் குழைதவழ, மெள்ளத் தவழ்ந்து, குறுமூரல் விளைத்து, மடியின் மீதிருந்து, விம்மிப் பொருமி முகம்பார்த்து, வேண்டும் உமையாள் களபமுலை வள்ளத் தமுதுண் டகம்மகிழ்ந்த மழலைச் சிறுவா! வருகவே! வளரும் களபக் குரும்பைமுலை வள்ளிக் கணவா! வருகவே. 7 7. திருச்செந்தூர்ப் பிள்ளைத் தமிழ்-வருகைப் பருவத்திலுள்ள ஒரு பாடல்.