பக்கம்:கவிதை பயிற்றும் முறை.pdf/27

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கற்பிப்பவர் தகுதி I 5 என்ற பாடலைக் கேதாரகெளளத்தில் பாடினால் எத்தகைய மகிழ்ச்சியுண்டாகும் என்பது அதைப் பாடி மகிழ்பவர்களே அறி வர்.அந்தப் பண் தெரியாதவர்கள் இப்பாடலைஓரளவு ஏதாவது இசையுடன் படித்தாலும் அதை நன்கு அநுபவிக்கலாம். இசை கலந்து பாட்டின் பொருளில் நாம் ஈடுபடும்பொழுது, அறிதுயில் போன்ற அநுபவம் நம்மிடம் உண்டாவதை அறியலாம். கம்ப ராமாயணம், சீவக சிந்தாமணி, பெரிய புராணம், திருவிளை யாடற் புராணம், வில்லிபுத்துரார் பாரதம் போன்ற காவியங் களில் பல கட்டங்களில் உள்ள பல பாடல்கள் இத்தகைய இன் பத்தை-அநுபவத்தை-உண்டாக்கும். நம் வாழ்க்கையில் அடிக் கடி குறுக்கிடும் நிகழ்ச்சிகளும் நாம் அடிக்கடிக் காணும் இயற் கைக் காட்சிகளும் மறைந்து போகாமல் கவிஞன் தன் பாடல் களில் ஒழுங்குறப் பதியவைத்துக் காக்கின்றான். அப்பாடல்களை உணர்ச்சியுடன் படிக்கும்பொழுது அதே நிகழ்ச்சி அல்லது காட்சி மீண்டும் நம் மனத்தில் திரும்பப்படைக்கப் பெறுகின்றது. அந்தியிரு ளாற்கருகும் உலகு கண்டேன்; அவ்வாறே வான்கண்டேன்; திசைகள் கண்டேன்; பிந்தியந்தக் காரிருள்தான் சிரித்த துண்டோ? பெருஞ்சிரிப்பின் ஒளிமுத்தோ? நிலவே நீதான்! சிந்தாமல் சிதறாமல் அழகை எல்லாம் சேகரித்துக் குளிரேற்றி ஒளியும் ஊட்டி 'இந்தா என் றேஇயற்கை அன்னை வானில் எழில்வாழ்வைச் சித்திரித்த வண்ணந் தானோ?” என்ற பாடலைப் படிக்கும்பொழுது இந்த உண்மையினை அறியலாம். ஆசிரியரின் பொறுப்பு: ஆசிரியப் பணி என்பது நாம் சிறப் பாகப் பெறும் உரிமை; அது கீதாசாரியனின் பணியைப் போன் றது. இப்பணியுடன் ஒரு பெரிய பொறுப்பும் இணைந்தே வருகின் றது. நாம் என்றும் அப்பணிக்கு நம்மைப் பொருத்தப்பட அமைத் துக் கொள்வதே அது. என்றும் கவிதையநுபவத்துடன் வாழ்வ தென்பது எளிதான செயல் அன்று. பிறவிலேயே ஆசிரியக் கூறு சிறிதளவாவது அமையப்பெற்றவர்களுக்கே இஃது இயலும். பயிற்சிக் கல்லூரிகளில் ஆசிரியத் துறையில் நம்பிக்கை கொண்டு பயிற்சி பெறுபவர்களுக்கும் அது சாத்தியமாகும். எண்ணிய எண்ணியாங்கு எய்துப; எண்ணியார் திண்ணிய ராகப் பெறின்." 8. பாரதிதாசன் "புரட்சிக்கவி' என்பதில் ஒரு பாடல் 9 குறள் 666