பக்கம்:கவிதை பயிற்றும் முறை.pdf/28

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 5 கவிதை பயிற்றும் முறை என்ற வள்ளுவர் வாக்கிலும் இவ்வுண்மை காணப்பெறுவதை எண்ணி ஒர்க. எடுத்துக்காட்டாக, ஆயிரக்கணக்கான மாணாக்கர்களில் எத்தனை பேர் கவிதையை அநுபவிப்பதில் ஆசிரியரைச் சார்ந்து நிற்கின்றனர்! கவிதை அவர்கள் வாழ்க்கையில் அழகினைத் தரலாம்; களிப்பினையும் நல்கலாம்; நல்லவனற்றைத் தரும ஆற்றலாகவும் திகழலாம். அங்கனமே, அது சவம்போலும் காட்சியளிக்கலாம்; சலிப்பினையும் தரலாம்; அதைப் படிப்பது வீண் என்ற உணர்ச்சியையும் அவர்களிடம் எழுப்பலாம். பெரும் பான்மையான மாணாக்கர்கள் கவிதையைத் துய்ப்பது ஆசிரியரைப் பொறுத்தே அமைகின்றது. அலெக்ஸாந்தர் ஹேடோ என்பார், 'குழந்தை கவிதையுலகில் புகுவதற்குக் காதது நிற்கின்றது; அதற்கு வழிகாட்டுவது ஆசிரியரின் பொறுப்பி லுள்ளது’’’ என்று கூறியிருப்பது ஈண்டுச் சிந்தித்துப் பார்த்தற் குரியது. தமிழ் நாட்டைப் பொறுத்தமட்டிலும், தமிழ் மொழியைப் பொறுத்தமட்டிலும், கவிதைக் கருவூலத்திற்க்குக் குறைவில்லை. எல்லாம் கவிதைமயமாகவே உள்ளன. இலக்கிய மேயன்றிச் சோதிடம், கணிதம், வானநூல் மருத்துவம், நிகண்டு போன்ற துறைகளும் கவிதை வடிவம் பெற்றுள்ளன. இதனால், நம்முடைய சிறுவர்களின் முருகுணர்ச்சியை வளர்ப்பதற்குக் கவிதைத் துறை சிறந்த பயிற்சிக் களமாகின்றது. அத்துறையில் பலரைக் கொண்டு செலுத்தாவிடில், அவர்கள் கவிதையுலகினை என்றும் காணவே முடியாது. இதனால் அவர்கள் தங்கள் கவிதை யதுபவமாகிய பிறப்புரிமையையே இழந்தவர்களாகின்றனர். 'செஞ்சொற் கவியின் பத்தைத் துய்க்கும் வாய்ப்பே அவர்கட்கு இல்லாது போகின்றது. மாணாக்கர் மறக்கமுடியாத அநுபவம்: ஒரு சிலர் மாறுபட்ட கவிதையநுபவத்தைச் சிறுவர்கட்கு அளிப்பதுபற்றி மாறுபட்ட கருத்தினைக் கொண்டுள்ளனர். பள்ளியைவிட்ட பிறகு ஒரு சிலரே கவிதைகளைப் படிப்பதால், கவிதையைப் படிக்கும்பயிற்சி தராததால் ஒன்றும் முழுகிப் போகவில்லையென்று இவர்கள் கருதுகின்றனர். இஃது உண்மையாயின், இது நம் பள்ளிகளைப் 10 The child stands waiting to enter the land of poetry, and it iies with the teacher to lead the way -On the Teaching of Poetry P.10.