பக்கம்:கவிதை பயிற்றும் முறை.pdf/34

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 கவிதை பயிற்றும் முறை பெறும் கவிதை அவ்வகுப்பிற்கு ஏற்றதுதானா என்று மட்டிலும் சோதித்துக் கொண்டால் போதுமானது. அதுவும் ஆசிரியர் நன்கு அறிந்த கவிதையாக இருப்பின், அவர் எடுக்கும் பாடம் பின்னும் சிறக்கும்; வெற்றியையும் நல்கும். இன்றியமையாத பழக்கம்: தாய்மொழியைக் கற்பிக்கும் ஆசிரி யர்கள் தாம் படித்துச் சுவைத்த சிறந்த கவிதைகளைத் தொகுப் பாகத் திரட்டி வைத்துக் கொள்ளும் பழக்கமுடையவர்களாக இருத்தல் வேண்டும். இன்று தமிழ்நாட்டில் தமிழ்ப் பணி யாற்றும் தமிழாசிரியர்களில் எத்துணைப் பேரிடம் இப்பழக்கம் உள்ளது? எத்துணைப் பேரிடம் கவிதைகளைச் சதா படித்துக் சுவைக்கும் பழக்கம் அமைத்துள்ளது? இவை இரண்டும் உண் மையிலேயே சவால் விடுக்கும் வினாக்களே. தமிழ்மொழியில் பல திரட்டு நூல்கள் உள்ளன என்பது உண்மைதான். ஆயின், அவை எவராவது படித்துச் சுவைத்த கவிதைகள் என்று துணிந்து சொல்ல இயலாது. அவை பல காரணங்களை அடிப்படையாகக் கொண்டு தொகுக்கப் பெற்றவை என்றுதான் கொள்ள வேண்டும். காதலில் நாமேதான் காதலியைப் பொறுக்கி எடுக்க வேண்டும். பிறர் காதலிக்கின்றனர் என்பதற்காக நாம் ஒரு பெண் மேல் காதல்கொள்ள இயலாது! இன்று நமக்குக் கிடைக்கும் திரட்டு நூல்கள் அனைத்தையும் நம்முடைய இலக் கியப்பரப்பிலுள்ள அழகான கவிதைகள் அனைத்தையும் நம்முன் கொண்டுவைக்க இயலும். நம்மிடம் சிறப்பான திறமை அமை யாத வரை, நாம் சிலவற்றைத்தான் சுவைக்க முடியும். நாம் சுவைக்கக் கூடியவை மட்டிலும்தான் நம்முடைய திரட்டு நூலில் இடம் பெறும். ஒரு நல்ல கவிதை உண்மையில் நல்லதாகவே இருக்க வேண்டும் என்று சிலர் வாதிக்கலாம். உண்மைதான்; ஆனால் ஒருவருடைய உள்ளத்தைக் கவர்ந்த கவிதை அனைவரு டைய உள்ளத்தையும் கவரும் என்று சொல்வதற்கில்லை; கவர வேண்டும் என்ற கட்டாயமும் இல்லை.ஒவ்வொருவருடைய அறிவு நிலைக்கும் உணர்ச்சி நிலைக்கும் ஒர் எல்லை உண்டு. கம்பனைக் கருத்துன்றிப் படிப்பவர்கள் இளங்கோவையும் படித்துச் சுவைக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை; சிந்தாமணியில் உள்ளத் தைப்பறிகொடுப்போர் சேக்கிழாரிடமும் உறவுகொள்ளவேண்டும் என்ற நியதி இல்லை; செயங்கொண்டாரிடம் ஈடுபட்டவர் முத் தொள்ளாயிரத்திடமும் கனிவு கொள்ள வேண்டும் என்ற அவசிய மும் இல்லை. நாம் பாநலம் துய்க்கும் திறனை வளர்த்துக் கொள்ளவேண்டும் என்பது உண்மையே; நாம் அதனை வளர்த் து க்கொள்ளவும் செய்கின்றோம். நாம் என்னதான் முயன்று அத்