பக்கம்:கவிதை பயிற்றும் முறை.pdf/36

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

罗驾 கவிதை பயிற்றும் முறை மேற்கூறியலாறு தேர்வுகளில் வெற்றியடைந்தவர்கட்கும் கவிதை யுலகத்திற்கும் சிறிதும் தொடர்பு இல்லாத நிலையைக் காணும்பொழுதுதான் நாம் மிகவும் வருந்த வேண்டியுள்ளது. தேர்வுக் காய்ச்சலில் சீரழிகின்றவர்கள் தம்முடைய உள்ளத் தைக் கவரும் கவிதைகளில் கருத்தினைச் செலுத்த முடிகின்ற தில்லை. பேராசிரியர்கள் தரும் குறிப்புகளிலும், அச்சு வடிவம் பெற்றுள்ள உரைநூல்களிலுமே தம் உள்ளத்தைப் பறி கொடுக் கின்றனர்; அவற்றையே "மறை மொழிகளாகக் கருதுகின்றனர். கவிதை கற்பிப்போரும் தேர்விற்காகவே கற்பிக்கும் சடகினைங் நடத்துகின்றனர். ஆனால், கவிதை கற்பிப்பதன் நோக்கம் முருகுணர்ச்சியை வளர்ப்பது, அழகினைக் கண்டு களிப்புறுவது என்பதாகும். இதனை அறிந்தும் கற்பிப்போர் அந்நோக்கத்தை நிறைவேற்ற முடிகின்றதில்லை. ஏதோ அத்தி பூத்தமாதிரி ஒரு சிலர் இல்லாமலும் இல்லை. நாம் விரும்பும் கவிதை யொன்றி னைச் சிறந்த முறையில் ஒரு வகுப்பிற்குக் கற்பித்தால், மாணாக் கர்களின் கண்களில் ஒருவித ஒளி வீசுவதைக் காணலாம்; அவர் கள் முகத்தில் ஒரு வித மலர்ச்சியைப் பார்க்கலாம்; அவருடைய உள்ளங்கள் உணர்ச்சி நிறைந்தவைகளாக இருப்பதையும் உணர லாம். இந்நிலையைக் காண்பதே நம்முடைய பரிசில் ஆகும். இதுவே நாம் பெறும் ஊதியத்தினும் சிறந்ததாகும். திறனாய்வாளர்களின் குறிப்புகள்: திறனாய்வாளர்கள் கவிதை யைப்பற்றிக் கூறியுள்ள குறிப்புகள் கவிதைகளை உணர்வதற்குப் பெருந்துணை செய்கின்றன என்பதில் சிறிதும் ஐயம் இல்லை. சில பாடல்களை இக்குறிப்புகளின்றிச் சரியாக உணரவும் முடி கின்றதில்லை. பேராசிரியர், நச்சினார்க்கினியர், பரிமேலழகர், அடியார்க்கு நல்லார் போன்ற உரையாசியர்கள் விட்டுச் சென் லுள்ள குறிப்புகள் இல்லையாயின் தமிழ் இலக்கியத்திலுள்ள பல அருமையான பாடல்களின் கருத்தினை நன்கு புரிந்து கொள்ள முடியாது. சாதாரணமாகப் பொருள் வெளிப்படை யாகவுள்ள பாடல்களும் அவர்களுடைய உரைகளால் புதுமெரு குடன் பொலிவதைக் காணலாம். சிந்தாமணியிலிருந்து ஓர் எடுத்துக்காட்டு: கரும்பே தேனே அமிர்தே காமர் மணியாழே! அரும்பார் மலர்மேல் அணங்கே மழலை அன்னம்மே சுரும்பார் சோலை மயிலே குயிலே சுடர்வீசும் பெருபூண் மன்னன் பாவாய் பூவாய் பிணைமானே’’’ இஃது இலக்கணையாரிலம்பகத்தில் வந்துள்ளது; சீவகன் .ே சிந்த மணி.செய், 2458