பக்கம்:கவிதை பயிற்றும் முறை.pdf/39

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கற்பிப்பவர் தகுதி 27 மிகப் பெரியதாக உள்ளது. அவர்களது மகிழ்ச்சியில் ஒருவித செழிப்பும் கூர்மையும் துலங்கும்; இவற்றின் முன்னர் முதிர்ந்த !ைர்களின் சுவையுணரும் ஆற்றலும்கூட மங்கிவிடுகின்றது. சில சமயம் ஆசிரியர் மாணாக்கர் நிலைக்குக் கீழிறங்க வேண்டுமென்று முயன்று அவர்கள் நிலைக்கும் மிகக் கீழாக இறங்கி வருவதினின் றும் இதை ஒரளவு அறியலாம். இங்ங்ணம் முயல்வதைவிட ஆசிரியர்கள் மாணாக்கர்களைத் தம் நிலைக்கு உயர்த்துவதில் முயல்வது சிறந்த பலன் அளித்தல் கூடும்.ஒரு கவிதையில் மாணாக் கர்கள் முற்றிலும் சுவைக்க முடியாத பல செய்திகள் இருக்கலாம். ஆனால், என்ன? கம்பனிலும் வள்ளுவத்திலும் சிலப்பதிகாரத்திலும் சிந்தாமணியிலும் நாம் எ டு த் த வு ட ன் புரிந்துகொள்ள முடியாத எத்துணையோ இடங்களிருக்கவில்லையா? எனினும், நாம் துணிவாக அவற்றைப் படித்துப் புரிந்துகொள்ள முயல் கின்றோமன்றோ? நம்முடைய முழுக் கவனத்தையும் செலுத்தி ஒவ்வொரு சொல்லையும் சொற்றொடரையும் மீட்டும் மீட்டும் ஆராயும்பொழுது, அவற்றின் பொருள்களைக் கண்டறியும் பொழுது, பாட்டின் புதிய அழகுகள் நமக்குப் புலனாகின்றன; புதிய உண்மைகள் தெளிவாகின்றன. முழுவதையும் சுவைக்க முடியாவிட்டாலும், ஒரளவு வெற்றியடைகின்றோம். பிறிதொரு முறை அப்பாடலைப் பயில நேரிடுங்கால், இன்னும் அது நமக்கு விளக்கம் எய்துகின்றது. நாம் விரும்பும் கவிதையைத் துணி வாகப் பயில்வதே மேல்; இதில் தயக்கமே கொள்ள வேண்டிய தில்லை. தயக்கம் இருப்பின், வெற்றி கிட்டுவதும் அரிதாகப் போய்விடும். இங்ங்னமே, ஒரு கவிதையை ஒரு வகுப்பிற்குக் கற்பிக்க நேரிடும்பொழுதும், தயங்காமல் செயலில் இறங்கி விடுதல் வேண்டும். கவிதையில் ஆசிரியர் கொண்டிருக்கும் நம்பிக்கை அவர் விரும்பும் சூழ்நிலையை உண்டாக்கிவிடும். உண்மையாக ஆசிரியர் மாணாக்கர்களை உயர்நிலைக்கு உயர்த்த வேண்டும் என்று விரும்புவாராயின், அதற்கு வேண்டிய முயற்சியையும் மேற்கொள்வாராயின், ம | ண |ா க் க ர் க ள் ஆசிரியர் விரும்பும் எந்த நிலைக்கும் உயர்வர் என்பது ஒரு தலை. இந்த உண்மையை அநுபவத்தில் பல ஆசிரியர்கள் நன்கு அறிவர். சிறந்த மாணாக்கர்கள் : சில சமயம் ஒரு வகுப்பில் ஆசிரியர் மனத்தைவிட உயர்ந்த மனங்களைக் கொண்ட மாணாக்கர் களும் இருத்தல் கூடும் என்பதை ஆசிரியர் நினைவில் கொள்ள வேண்டியதொன்று. ஆசிரியர் மனத்தைவிட விரைந்து செல்லக் கூடிய மாணக்கர் மனங்களும் உண்டு. சில சமயம் இவ்வுண் மையை நாம் நினைத்தாலும், இத்தகைய மனங்கள் இருப்