பக்கம்:கவிதை பயிற்றும் முறை.pdf/40

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

器超 கவிதை பயிற்றும் முறை பதைப் பெரும்பாலும் நாம் காணத் தவறுகின்றோம். காரணம், மாணாக்கரின் மனநிலையைப் புரிந்துகொள்ள முயலாததே. மாணாக்கர் நிலைக்கு நாம் இறங்கவேண்டும் என்பதை விட்டு, அவர்களை நம் நிலைக்கு உயர்த்த வேண்டும் என்று முயன்றால் , மிக உயர்ந்த கவிதைகளையும் மாணாக்கர்களைச் சுவைக்கச் செய்தல் வேண்டும் என்று விரும்பினால், உண்மையில் சில உயர்ந்த மனங்கள் இருப்பது நமக்குத் தட்டுப்படும். மாணாக்கர் கள் அப்பாடல்களைச் சுவைக்கும்பொழுது அவர்களின் கண் னொளியின் ஒளிர்விலிருந்தே இதனை அறிந்து கொள்ளலாம். இவ்வாறு நம் ஆற்றல் முழுவதையும் கொட்டி ஒரு பாடலைப் பயிற்றும்பொழுது, சில சமயம் நாம் அக்கவிதைகளில் காண முடியாத ஆழ்ந்த உள்ளுணர்வையும் உணர்ந்து விடுகின்றோம்; கவிதையின் மிக ஆழ்ந்த அடித்தளமும் நம் உணர்வுக்குத் தட்டுப் படுகின்றது. கவிதைச் சுவையின் கொடு முடியையும் நாம் எட்டி விட முடிகின்றது. நாமும் நம் நிலையைவிட எத்தனையோ மடங்கு உயர்ந்து விடுகின்றோம். இந்த உண்மையையெல்லாம் நன்கு உணர்ந்து கவிதைகளைத் தேர்ந்தெடுக்கும் செயலில் இறங்க வேண்டும். மேற்கூறியவாறு தேர்ந்தெடுக்கப்பெற்ற கவிதைகளை மாணாக்கர்கட்கு அறிமுகம் செய்வதிலும் ஒரு முறை உண்டு: வழி உண்டு. இதை அடுத்துக் காண்போம்.