பக்கம்:கவிதை பயிற்றும் முறை.pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இயல்-4 கவிதை அறிமுகம் அறிமுகம் செய்து வைத்தல் என்பதுவே ஒரு கலை. என்ன தான் படித்திருந்தாலும், எத்தனைப் பட்டங்கள் பெற்றிருந்தா லும் நாகரிகமாக அறிமுகம் செய்து வைக்கமுடியாத பலரை தாம் காணத்தான் செய்கின்றோம். ஆனால், இலக்கிய உலகில் அறிமுகம் செய்து வைப்பதென்பதோ ஒர் அரிய கலையாகக் காட்டப்பெறுகின்றது. கம்பன் சித்திரித்துள்ள கலையுலகத்தில் பரதன் குகனுக்குத் தன் தாயரை அறிமுகம் செய்து வைத்தல் மிக அற்புதமாகக் காட்டப்பெற்றுள்ளது. நாகரிக உலகை அறி யாத கங்கை வேடனுக்குப் பரதன், கோசலை, சுமித்திரை, கைகேயி ஆகியோரை அறிமுகம் செய்கின்றதாகக் கம்பகாடன் படைத்துள்ள சொல்லோவியங்களை ஒவ்வொருவரும் படித்துச் சுவைக்கவேண்டியது மிகவும் இன்றியமையாதது. அந்த முறையில் சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல் என்ற பெற்றியில், கவிதை களை அறிமுகம் செய்தால் மாணாக்கர்கள் தமக்குப் பாடமாக வந்துள்ள கவிதைகளை நன்கு சுவைப்பர். கம்பராமாயணத்தில் சூளாமணிப் படலம் ஐந்தாவது படிவத் திற்குப் பாடமாக வந்துள்ளதாகக் கொள்வோம். அநுமனும் சீதையும் உரையாடுவதாகக் கம்பன் சித்திரித்துள்ள அற்புதச் சொல்லோவியங்களை மாணாக்கர்கட்கு எவ்விதம் அறிமுகம் செய்வது? இன்று சாதாரணமாகப் பள்ளிகளில் எவ்வாறு அறி முகம் செய்யப்பெறுகின்றது? 'கம்பராமாயணம் சூளாமணிப் படலம்: கம்பராமாயணம் என்பது கம்பரது இராமாயணம் என்று விரியும். ஆறாம் வேற்றுமைத்தொகை. கம்பரால் செய்யப் பட்ட இராமாயணம் என விரிந்து மூன்றன் உருபும் பயனும் உடன் தொக்க தொகை எனவும் கொள்ளலாம்; கம்பர்:இயற்றிய இராமாயணம் என்பது கருத்து. இராமாயணம் ராம+-அயநம் வடமொழிப் புணர்ச்சி; தீர்க்கசந்தி."ராம’ என்னும் சொல்லுக்குத் தன் திருமேனி யழகினாலும், நற்குண நற்செய்கைகளாலும் யாவரையும் மகிழ்விப்பவன்’ என்பது பொருள். அயநம்-அறி விப்பது: நெறி எனவும், இடம் எனவும் பொருள்படும். இதற்கு அவதாரம், கதை எனப்பொருள் கூறுவாருமுளர். இராமாயணம், பாலகாண்டம், அயோத்தியா காண்டம் ஆரணிய காண்டம், கிட்கிந்தா காண்டம், சுந்தர காண்டம், யுத்த காண் டம், என்னும் ஆறு க | ண ட ங் க ைள யுடையது. இராமா