பக்கம்:கவிதை பயிற்றும் முறை.pdf/42

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

← Ꮐ கவிதை பயிற்றும் முறை ...; ார். கம்பர் அதனை முதல் நூலாகக் கொண்டு தமிழ் இயற்றினார். ஆகையால் இது வழிநூலாம். இந் நாலுக்குக் கம்பரால் இடப்பட்ட பெயர், இராமாவதாரம் என்பது. இஃது அறம், பொருள், இன்பம் வீடு என்னும் உறுதிப் பொருள் நான்கினையும் திறம்பட விரித்துப் பரம்பரையான பழைய வரலாதுகளைத் தொகுத்துக் கூறுகின்றமையால் இதிகாசமாம்.' பணத்தை முதன்முதலில் வான்மீகி முனிவர் வடமொழியில் மொழியில் १ இத்துடன் அறிமுகம் நிறுத்தப் படுவதில்லை! கம்பர் என்ற பெயர்க் காரணம், தாய் தந்தையர், பிறந்த குலம், தழுவியிருந்த சமயம், ஆதரித்தவர், சமகாலப் புலவர்கள், சமகால அரசர்கள், இயற்றிய நூல்கள், காலம் போன்ற செய்திகளை யெல்லாம் அடக்கி நூலாசிரியரின் வாழ்க்கை வரலாறு கூறிய பிறகு, சுந்தர காண்டம் பெயர்க்காரணம், அதிலுள்ள படலங்கள் முதலியவை களும் அறிவிக்கப்பெறும். இத்தனைக்கும் மேலாக இராமாயணக் கதையும் சுருக்கியுரைக்கப்பெறும். இதன் பிறகு பாடமாக வந் துள்ள பகுதியின் பாடல்கள் ஒவ்வொன்றாகப் பதவுரை, தெளி வுரை, விளக்கவுரை, இலக்கணக் குறிப்பு என்ற வரிசையில் கற்பிக்கப்பெறும். இவ்வாறு அடியைப் பிடிடா, பாரதப் பட்டா!' என்று தொடங்கிப் பாடல்களை அறிமுகம் செய்வ தால் வரும் பயன் என்னை? வெறும் சலிப்பும் அலுப்பும் தவிர வேறு ஒன்றும் இராது. அடுத்து வரும் காலாண்டுத் தேர்வு அரையாண்டுத் தேர்வுகளில் கேட்கப்பெறும் வினாக்கட்கு விடைகளாகத் தருவதைத் தவிர, இதில் வேறு ஒரு நோக்கமும் இல்லை. இந்த அறிமுகத்தால் கவிதையைப்பற்றிய சிறப்பு ஒருசிறிதும் புலனாகாது. அதற்கு மாறாக வெறுப்புச் சுவை வேண்டுமானால் வளரக்கூடும். கவிதையை எப்படித்தான் அறிமுகம் செய்வது? இந்த வினா வுக்கு விடைக்கானல் அவ்வளவு எளிதன்று. இந்த நூலாசிரி யரைப் பொறுத்தவரை, இன்று நடைமுரையிலுள்ள முறைகள் அனைத்தும் சரியானவை அல்ல என்றுதான் கருதுகின்றார். எல்லா முறைகளும் கவிதைச் சுவையைக் கெடுக்கத்தான் இணை செய்கின்றன. இவற்றால் கவிதைமீது வெறுப்புத் தட்டவும் செய்யலாம்; கவிதைகளை யாத்த கவிஞனையும் பாராட்டத் 1. தேர்வுக்காக ஆயத்தம் செய்யப்பெற்ற ஓர் உரை நூலிலிருந்து எடுத்தது. இம்முறை ை:ே பல தமிழாசிரியர்கள் யேற்கொள்ளுகின்றனர், 2Alexander Haddw On the Teaching of Poetry, pp. 18-24