பக்கம்:கவிதை பயிற்றும் முறை.pdf/44

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

33 கவிதை பயிற்றும் முறை கொல்துறைக் குற்றில மாதோ என்றும்; உண்டாயின் பதம் கொடுத்து இல்லாயின் உடன் உண்ணும் இல்லோர் ஒக்கல் தலைவன் அண்ணல் எங் கோமான் வைந்நுதி வேலே’. அதியமானிடமிருந்து தொண்டைமானிடம் தூது சென்ற அவ்வையாரிடம் தொண்டைமான் தன் ப ைட க் க ல க் கொட்டிலைக் காட்டித் தன் செருக்குத் தோன்ற நின்றபோது, அவ்வையார் அதியமானின் படைக்கலங்களைப் பழிப்பதுபோல் புகழ்ந்தும், தொண்டைமானின் படைக்கலங்களைப் புகழ்வது போலப் பழித்தும் கூறியதாக அமைந்த பாட்டு இது. இப் பாடலை எங்ங்னம் அறிமுகம் செய்வது? இப்பாடலைப் புரிந்து கொள்வதற்கு அவ்வையாரின் ஆதியோடந்த வரலாறு தேவை யில்லை. அதுபோலவே தொண்டைமான் அதியமானின் வரலாறு களும் தேவையில்லை. அவ்வையாருக்கும் அதியமானுக்கும் இடையே இருந்த நட்பும் நம்பிக்கையும், தொண்டைமானுக்கும் அதியமானுக்கும் ஏற்பட்ட பகைமை உணர்ச்சியும் தெளிவாக அறிவிக்கப்பெற்றால் போதும். பாடல் தோன்றிய சூழ்நிலையை மாணாக்கர் அறிந்து கொண்டால் பாடலின் உயிர் நாடி பேசத் தொடங்கி விடும். பாடலும் துலக்கமாகும். விளக்க முறை: பல்வேறு போக்குகளில் இம்முறை மேற் கொள்ளப் பெறுகின்றது. சில சமயம் பாடல்களிலுள்ள கடின சொற்கள் மட்டிலும் கரும்பலகையில் எழுதப்பெற்றுப் பாடம் தொடங்கப் பெறுகின்றது. இந்தப் போக்கை மேற்கொள்வத னால் கடின சொற்கள் பின்னும் கடின சொற்களாக மாறு கின்றன. அச்சொற்கள் வந்துள்ள சந்தர்ப்பங்களை அறியாது அவற்றின் பொருளை யாங்கனம் அறிந்து கொள்ள இயலும்? இவ்வாறு சொற்களின் பட்டியலை முன்னரே தருவதற்குப் பதி லாகப் பாடல்கள் வகுப்பில் நல்ல முறையில் படிக்கப்பெற்று அவற்றின் உயிர்நாடியை மாணாக்கர்கள் அறிந்து கொள்வார் களேயானால், பெரும்பாலோர் சந்தர்ப்பங்களையொட்டிக் கடின சொற்களின் பொருளை அறிந்து கொள்ளக்கூடும். இம் முறையில் சொற்களின் பொருளை அறிவதைக் காட்டிலும் வேறு சிறந்த முறை ஒன்று இருக்க முடியுமா? சந்தர்ப்பங்களையொட்டி மாணாக்கர்கள் சொற்களின் பொருளை ஊகித்தறிந்து பிறகு அவற்றின் சரியான பொருளை உறுதி செய்து கொள்வதை விட. 8 புறம் - 95.