பக்கம்:கவிதை பயிற்றும் முறை.pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்ணெடு கண்ணினை நோக்கொக்கின் வாய்ச்சொற்கள் என்ன பயனும் இல." இக்குறளால் நோக்கு என்ற சொல்லின் எண்ணத்தைத் தோற்றுவிக்கும் ஆற்றலை அறிந்த நமக்கு மேற்குறித்த கம்ப நாடன் வாக்கில் வந்துள்ள நோக்கு’ என்பதன் பொருளை அறிவதில் சிரமம் ஒன்றும் இல்லை. என்றாலும், காவியத்தில் அவ்வாக்கின் சந்தர்ப்பத்தை யறியாது அது குறிக்கும் பொருளையோ அன்றி வேறு நயத்தையோ அறிந்து அநுபவிக்க முடியாதன்றோ? அன்றியும், செய்யுள் உறுப்பினுள் ஒன்றாகிய நோக்கு என்பதற்குப் பேராசிரியர் 'முல்லை வைந்துனை என்ற அகப்பாட்டை" எடுத்துக்காட்டித் தம் நுண்மாண் நுழைபுலம் தோன்றக் கூறியிருக்கும் அரிய உரையும் ஈண்டுச் சிந்திக்கற் பாலது. ஒரு செய்யுளின் அடியில் வந்துள்ள சொல்லின் பொருளை நன்கு அறிவதற்கு அந்த அடியின் பொருளை நன்கு அறிவதுடன், அச்செய்யுளில் எத்தனை அடிகள் வந்திருந்தாலும் அவற்றை முழுவதும் அறிந்தாலன்றி அச்சொல்லின் பொருளைத் தெளிவாக அறிந்து கொள்ள இயலாது என்று அவ்வுரையாசிரியர் குறிப்பாற் பெறவைத்தமை எண்ணி எண்ணி மகிழ்வதற்குரியது: சித்தித்தற்குரியது. தமிழ் இலக்கியத்திலிருந்து இத்தகைய நுட்பமான எடுத்துக்காட்டுகள் எத்தனை வேண்டுமானாலும் தரலாம். கைவண்ணம் அங்குக் கண்டேன் கால்வண்ணம் இங்குக் கண்டேன்." கடைக்கண்ணாற் கொல்வான்போ னோக்கி நகைக்கூட்டம் செய்தானக் கள்வன் மகன்.' என்ற அடிகளின் நயத்தை அவை வந்துள்ள சந்தர்ப்பங்களை யறியாது யாங்ங்ணம் அறிந்து கொள்ள இயலும்? இனி, அதிகம் கூறவேண்டியதில்லை. ஆசிரியர்கள் முரு குணர்ச்சியை மாணாக்கர்களிடம் வளர்க்க விரும்பினால், அவர் களாகவே கவிதைகளிலுள்ள நயத்தைக் காணும் ஆற்றலை அவர் 7. குறள் 11000. 8. அகம்-4, 9. தொல், பொருள். செய்யுளி. (பேராசிரியம்) 104, .ெ கம்ப. அகலிகை, 82, 11 குறிஞ்சிக்கலி. 16: