பக்கம்:கவிதை பயிற்றும் முறை.pdf/52

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இயல்-5 கவிதையைப் படித்தல் பாட்டு என்பது பாடி இன்புறவேண்டிய கலை. பாட்டை அநுபவிப்பதற்குச் செவிப்புலன் வேண்டும். பாட்டின் ஒலிநயம் தான் நம் உள்ளத்தைக் கவர்வது; கொள்ளை கொள்வது. பூதங்கள் ஐந்தாகிப் புலனாகிப் பொருளாகிப் பேதங்கள் அனைத்துமாய்ப் பேதமிலாப் பெருமையனைக் கேதங்கள் கெடுத்தாண்ட கிளரொளியை மரகதத்தை வேதங்கள் தொழுதேத்தும் விளங்குதில்லை கண்டேனே." (புலனாகி. தன் மாத்திரைகள் ஐந்துமாகி, கேதங்கள் - துன் பங்கள்.} என்ற பாடலை உரைநடைபோல் படிக்கலாம்; கதைபோல் வாய்க்குள்ளேயே படிக்கலாம். மெல்லப் பாடியும் படிக்கலாம். இம் மூன்று முறையில் எது சிறந்தது? பாடலை வாய்க்குள்ளேயே படித்தறியும்போது அதன் கருத்துமட்டிலும்தான் விளங்கியிருக் கும். ஏதோ ஒரு பெருங்குறை தட்டுப்படும்; மதுரம் மிக்க மாம் பழத்தை உண்ணாமல் முகர்ந்துபார்த்துவைத்துவிட்டதுபோன்ற குறை உணரப்படும். வாய்விட்டுப் படித்திடும்போதும் ஒருவிதக் குறை உணரப்படத்தான் செய்யும்; அந்தப் பழத்தை முகர்ந்து பார்த்தது மட்டும் அன்றி, மெல்ல நறுக்கி வைத்து அதன் கனிந்த நிறத்தையும் கண்டு பிறகு உண்ணாமல் வைத்து விட்டாற் போன்ற குறை உணரப்படும். பாடலைப் பாடிப் படிக்கும் போதுதான் குறைகளெல்லாம் நீங்கிப் பழத்தையே உண்டது போன்ற மனநிறைவு ஏற்படும். எனவே, கவிதையை அநுபவிப் பதற்குக் கட்புலன் மட்டிலும் போதாது; செவிப்புலனின் துணை யும் வேண்டும். ஒவியம் பார்த்து இன்புறவேண்டிய கலையாகு மாறுபோலப் பாட்டும் பாடி இன்புற வேண்டிய கலையாகும். கவிதையைப் கற்பிக்கும் ஆசிரியர்கள் இந்த உண்மையை அறிந்து கவிதையை வகுப்பில் படிக்க வேண்டும். 1 திருவாசகம்-48