பக்கம்:கவிதை பயிற்றும் முறை.pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

玺忍 கவிதை பயிற்றும் முறை நாட்டாரும் இதன் உணர்ச்சியை நன்கு அநுபவித்து மகிழக் கூடும், சிலரது தவறான முறை: ஒரு புதிய பகுதியைக் கற்பிக்க நேரிடுங்கால், சில ஆசிரியர்கள் மாணாக்கர்களில் சிலரை ஆளுக் கொரு பாடலாக வாய்விட்டுப் படிக்கச் செய்கின்றனர். ஆனால், பட்டறிவு மிக்க ஆசிரியராலேயே அப்பகுதியை முதல் தடவை யாகப் படித்தல் இயலாது. ஆம், அவரால் எங்கனம் இயலும்? அவர் அதை நன்கு படித்து உணர்ந்திருந்தாலன்றோ நல்ல முறை யில் படிக்க முடியும்? 'ஒரு பெரிய தொடர்நிலைப் பாட்டை நாம் நன்கு உணராதவரை அதைப் புரிந்துகொள்ள முடியாது; அதை உரக்கப் படித்து அதிலுள்ள உணர்ச்சிகளை நாம் மீண்டும் உண்டாக்காதவரை அதன் பொருள் தெளிவாகப் புலனா காது’ - இவ்வாறு கூறுவர் முர்ரே என்ற மேற்புலப் பேராசிரியர். பாடலைப் படிப்பதற்குமுன் அதை நன்கு உணர்ந்து கொள்ள வேண்டும். உண்மை இங்ங்னம் இருக்கும்போது ஒன்றுமறியாத மாணாக்கர்கள். பாடப்பகுதியின் தொடக்கத்தையே அறியாத வர்கள், ஆளுக்கொரு பாடலாகப் படித்தால் அவற்றை அவர்கள் யாங்கனம் உணர்தல் முடியும்? அப்படிப் படிப்பதால் அவர்கள் பாடல்களின் அழகைக் காண முடியுமா? அவற்றிலுள்ள முரு குணர்ச்சியைப் பெறத்தான் முடியுமா? இம்மாதிரிப் பொறுப் பற்ற முறையில் புதிய பாடங்களை மாணாக்கர்களுக்கு அறி முகம் செய்து வைக்கும் ஆசிரியர்களைப்பற்றி நாம் என்ன நினைப்பது? இன்னும் சிலர் படிப்பதை அலட்சியமாக எண்ணி, ஏதோ வாய்திறந்து படிக்கின்றனர். பாடல்களிலுள்ள சொற் களின் பொருள்களை அறிந்து கொண்டால் மாணாக்கர்கள் பாடல்களை நன்கு உணர்ந்து கொள்ள முடியும் என்று எண்ணு கின்றவர்கள் இவர்கள். இன்னும் ஒரு விந்தை என்னவென்றால் ஒரு தடவை படித்து முடித்தவுடன் அப்பாடல்களை கற்பிப் பதிலே இறங்கியும் விடுகின்றனர்! படிப்பது அவ்வளவு முக்கிய மன்று. தமது போதனைதான் மிகவும் முக்கியம் என்று இவர் கள் எண்ணுகின்றனர் போலும். உண்மையாக வேண்டப்படுவது எது? ஒரு பாடலைப் பயிற்ற வேண்டுமானால், பாடல்தான் முக்கியம்; பாடல் நூலில் இல்லை. அது படிக்கும்போதுதான் தோன்றும். பாடலை முதலில் மனத்தில் கொள்வதுதான் மிகவும் இன்றியமையாதது. அலட்சியமாக ஒரு தடவை படிப்பதால் பாடல் எங்ங்ணம் மாணாக்கர் மனத்தில் குடிபுகும்? உணர்வதற் குக் காலம் வேண்டுமன்றோ? இதைச் சிறிதும் உணராது கற்பிப்ப வர் கவிதை பயிற்றுதலின் நோக்கங்களைச் சிறிதும் அறியா தவர் என்றே கொள்ளவேண்டும்.