பக்கம்:கவிதை பயிற்றும் முறை.pdf/56

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 கவிதை பயிற்றும் முறை நான்கலந்து பாடுங்கால் நற்கருப்பஞ் தேன் கலந்து பால்கலந்து செழுங்களிக் ஊன்கலந்து உயிர்கலந்து உவட்டாமல் இல் சுவைகலந்தென் iப்பதுவே." என்று வெளியிட்டுள்ளதைப் பாட்டைப் பயிற்றும் ஆசிரியர்கள் எண்ணி உணர்தல் வேண்டும். கவிதையதுபவம் இன்னது என் பதை விளக்கும்போதும் இதனைக் குறிப்பிட்டுள்ளோம். கன்னன் மனவுவப்போடு தன் புண்ணியமனைத்தையும் வேதியனாக வந்த கண்ணனுக்கு ஈந்து, பெறற்கரிய பேற்றைப் பெற்று மகிழ்ந்த நிலையை வில்லிபுத்தூரார் காட்டும், நீலநெடுங் கிரியும்மழை முகிலும் பவ்வ நெடுநீருங் காயாவும் நிகர்க்கும் இந்தக் கோலமும்வெங் கதைவாளும் சங்கு நேமி கோதண்டம் எனும்படையும் குழைத்த வாச மாலைநறுத் துழாய்மார்புந் திரண்ட தோளும் மணிக்கழுத்துஞ் செவ்விதழும் வாரி சாதக் காலமலர் எனமலர்ந்த முகமுஞ் சோதிக் கதிர்முடியும் இம்மையிலே கண்ணுற் றேனே." என்ற சொல்லோவியத்தைக்கற்பிக்க நேரிடுவதாகக் கொள்வோம். இங்கு வில்லியின் கன்னன் மாணாக்கர்களிடம் பேசுவதற்குக் காத் துள்ளான். கன்னன் பெற்ற உணர்ச்சியை வில்லி பெற்றால்தானே அவன் கொண்ட உணர்ச்சியை நம்மிடம் கொட்ட முடியும்? வில்லி பெற்ற உணர்ச்சியை ஆசிரியர் பெற்றால் அன்றி, அவர் அவ்வுணர்ச்சியை மாணாக்கர்கட்கு எங்ங்ணம் காட்ட முடியும்? ஆசிரியர் இவ்வுணர்ச்சியை எவ்வாறு பெறுவது? ஆசிரியர் தம்மை கன்னனாகவே எண்ணிக்கொண்டு பாடலை உணர்ச்சி ததும்ப இசையுடன் படித்தால், இவ்வுணர்ச்சியைப் பெறலாம். கன்னன் பெற்ற உணர்ச்சி ஆசிரியரைக் கிளர்ந்தெழச் செய்தால், அவர் வாயிலிருந்து வெளிவரும் பாடலும் அவ்வுணர்ச்சியைப் பீறிட்டுக் கொண்டு வெளிவரும். பாடலை படித்தல் எளிது என்று அலட்சியம் செய்யும் ஆசிரி யரிடம் ஒருநாளும் கவிஞனின் உணர்ச்சி தோன்ற முடியாது. 8. ஆளுடைய அடிகள் அருள்மாலை-செய்".7 4. வில்லிபார. பதினேழாம் போர். செய். 247,