பக்கம்:கவிதை பயிற்றும் முறை.pdf/6

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நூல் முகம் புத்தகம் படிக மாலை குண்டிகை பொருள்சேர் ஞான வித்தகம் தரித்த செங்கை விமலையை அமலை தன்னை மொய்த்தகொங் தளக பார முகிழ்முலை தவள மேனி மைத்தகு கருங்கட் செவ்வாய் அணங்கினை வணங்கல் செய்வாம்.' -கம்பநாடன் பல ஆண்டுகட்கு முன்னர் டி. கே. சி. பம்பாய் சென்றிருந்த போது அவரை ஃபிரான்சு நாட்டைச் சார்ந்த மாடம் சோஃபியா வாடியா (Madame Sophia Watia) என்ற அம்மையார் (அப்போது அவர் இந்தியன் P. E. N. சங்கத்தின் தலைவர்) தம் இல்லத் திற்கு அழைத்து விருந்தளித்து உபசரித்தாராம். இலக்கிய மேதையாகிய இப் பெருமாட்டி பன்மொழிப் புலமை வாய்ந்த வர் என்றாலும், தமிழ்மொழியை அறியாதவர். அம்மையாரு டன் அளவளாவிக் கொண்டிருந்தபோது டி. கே. சி. திருவாசகத் திலிருந்து ஒரு திருப்பாடலை ஒரு தரம் பாடிக் காட்டி விளக்கம் கூறினார். அப்பார் சடையப்பன் ஆனந்த வார்கழலே ஒப்பாக ஒப்புவித்த உள்ளத்தார் உள்ளிருக்கும் அப்பாலுக் கப்பாலை பாடு துங்காண் அம்மானாய்." என்பது அப்பாடல். அவர் கூறிய விளக்கம் இது: "ஒரு குடத்துத் தண்ணீரை வீட்டுக்குக் கொண்டு வந்து விட் டிலும் மச்சுப்படியேறி மாடிக்குக் கொண்டு சேர்ப்பதற்குள் திணறிப் போகிறோம் நாம். ஆனால், இறைவனோ கடலி 1 கம்படி , காப்பு-8 திருவா, திருவெம்-11