பக்கம்:கவிதை பயிற்றும் முறை.pdf/66

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

蔷空 கவிதை பயிற்றும் முறை மன் உரைத்த கருமம்'; துரியோதனா தியராம் நூறு பசுக்களைக் கொன்று மறக்கள வேள்வி புரிவிப்பதே எம்மனோர் கடன் என்பது வீமன் உரைத்த கருமம்'; பாண்டவர்கள் நிலவுலகை ஆளுதலும் துரியோதனாதியர் வீர நாடு அடைதலுமே செய்யக் கூடிய தவம் என்பது கண்ணன் உரைத்த கருமம்'. 'அவன் இசைத்த கருமமும்-என்பதில் அவன் யார்? இசைத்த கருமம் யாது? அவன்’ என்பது துரியோதனன். பாண்டவர்கள் திரும் பவும் கானேக வேண்டியதுதான் என்பது அவன் இசைத்த கருமம்.’’ தருமன் தங்கள் நிலைமையை எந்த உவமையால் சுட்டுகின்றான் நஞ்சுதனை மிக அருந்தி நன்மருந்தும் மந்திர மும் விரைந்து நாடாது இருக்கும் எஞ்சினர் தங்களைப் போல-என்ற உவமையால்.’’ இந்த உவமையை நன்கு விரித்துக் கூறும்படியும் சிறுசிறு வினாக்ககளை விடுத்து விடைகளை வருவிக்கலாம். யார் மனத்தும் இருக்கும் சோதி-என்ற சொற்றொடர் யாரைக் குறிக்கின்றது? ஏன்? 'கண்ணனைக் குறிக்கின்றது. கண்ணன் நல்லார் மனத்தும் தியார் மனத்தும், ஞானியர் மனத்தும், பேதையர் மனத்தும், கற்றவர் மனத்தும், கல்லாதவர் மனத்தும் வேற்றுமையின்றி அந்தர்யாமியாய் எழுந்தருளியிருக்கும் ஒளி வடிவமானவன்.” எல்லோருடைய கருத்தையும் அறிந்தவனாதலின், அவனுக்குத் தெரியாதது ஒன்றுமில்லை. ஆகவே, அவன்தான் தம் நிலையைச் சமாளிக்கத் துணைபுரிய வேண்டும் என்பது இச்சொற்றொடரில் அடங்கியுள்ளது என்ற சொல்நயத்தை’ ஆசிரியர் நன்கு விளக்கல்வேண்டும். மேலும், செஞ்சொல் முனி, அஞ்சொல்முனி நஞ்சுதனை, எஞ்சினர் என்பவற்றிலுள்ள இரண்டாம் எழுத்து ஒரே மாதிரியாய் வருதல் எதுகைக்கு ஒர் எடுத்துக்காட்டு என்ப தையும் விளக்கலாம். ஒவ்வொரு பாடலிலுமுள்ள எதுகையை எடுத்துக்காட்டுமாறு மாணாக்கர்களை வினவலாம். இரண்டாம் பாடல்: குருநாட்டின் வளத்தைச் சுட்டும் சொற் றொடர் எது? செய்வரால் இனம் உகழும் திருநாடு’. கண்ணன் தருமன் கருத்தை எவ்வாறு வினவுகின்றான்? நாட்டைச் சமா தானத்தால் பெற நினைவா? மீண்டும் துன்பம் அநுபவிப்பவ ராய்க் கானேகுதல் நினைவா? அல்லது போர் செய்ய நினைவா? என்று வினவுகின்றான். 'அமரர் கோமான்-என்ற தொடர் யாரைக் குறிக்கின்றது? கண்ணபிரானை’’. அமரர் என்பதன் பொருள் 16.? 'மரணமில்லாதவர்.' தேவர்கள் அமுத முண்டதனால் மரணம் இல்லாதவராயினர் என்பதை ஆசிரியர் விளக்கலாம். இப்பாடலில் பஞ்சபாண்டவரைக் குறிக்கும்