பக்கம்:கவிதை பயிற்றும் முறை.pdf/70

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5 & கவிதை பயிற்றும் முறை பிரித்துப் பலமுறைப் படிக்க வேண்டும். நல்ல முறையில் கவிதை பயிற்றலைக் கவனித்துப் பயிற்சி பெற்ற மாணாக்கர் கள்தாம் இத்தகைய பாடல்களை அறிய முடியும்; உணர்ந்து சுவைக்க முடியும். இவ்வாறு படித்துக் காட்டுதல் போதுமென்று ஆசிரியருக்குத் தோன்றும்வரை படித்துக் காட்டலாம். மாணாக் கர்களின் முகமலர்ச்சியே இதற்கு அளவு கருவி. படிக்கும் பொழுதே சில அருஞ்சொற்களுக்குப் பொருளும் கூறலாம். பாடலைப் படித்து முடிந்த பிறகு பாடலில் கூறப்பெற்றுள்ள கருத்து ஒவ்வொன்றையும் தனித்தனியாகக் கூறும்படித் தூண்டலாம்-வினாக்களின் மூலமாக, அடியிற் காணும் முறை யில் இதனை மேற்கொள்ளலாம். கவிஞர் மிகவும் பரந்த நோக்குடையவர் என்பது எதனால் அறியக் கிடக்கின்றது? : "யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்ற கொள்கையை யுடையவராதலால்.’’ எங்கும் தமிழ் முழக்கம் கேட்கப்பெறும் இக்காலத்தில் கட்டாயம் இதைப் பலர் சொல்லக் கூடும். பலர் மேடைப் பேச்சுகளில் இவ்வரியை அடிக்கடிக் கையாளுவதை மாணாக்கர்கள் கவனித்திருத்தல் கூடும். ஒருவருக்கு நன்மையும் தீமையும் எப்படி வருகின்றதாகக் கவிஞர் கூறுகின்றார்: "நன்மையும் தீமையும் பிறர் தருவதால் வருவ தில்லை; முன் நியதிப்படி வருகின்றன. நோய் எப்படி வரு கின்றது? எப்படித் தீர்கின்றது? அதுவும் அப்படித்தான்; தானாக வருகின்றது; தானாகத் தணிகின்றது.’ இறப்பினைக் குறித்துக் கவிஞர் என்ன தெரிவிக்கின்றார்? சாவது ஒரு புதிய காரியமல்ல!" வறுமையையும்செல்வ நிலையையும் ஒன்றாகப் பாவிக்கின்றார் கவிஞர் என்பதைப் பாட்டின் எந்த அடிகள் காட்டுகின்றன? "இனிதென மகிழ்ந்தன்று மிலமே, முனிவின் இன்னா தென்றலும் இலமே! என்ற அடிகளால். உயிர்கள் எவ்வாறு இன்ப துன்பங்களை அநுபவிக்கின்றன என்பதைக் கவிஞர் எப்படிக் கூறுகின்றார்? நீரின் வழியே இயக்கப்பெறும் மிதவைபோல உயிர்கள் அவற்றை அநுபவிக்கும்.’’ இவ்விடையை மாணாக்கர் இறுப்பது சற்றுக் கடினம்: நடை கடினம்; கூறும் முறையும் கடினம்; மொழியும் கடினம். இவற்றை மாணாக்கர்கள் தாமாகப் புரிந்து கொள்வது இயலாததொன்று. எனவே, இதனை ஆசிரியரே நன்கு விளக்கிச் சொல்லும்படியும் நேரிடலாம். மழை எப்படிப் பெய் கின்றது? எப்பொழுது பெய்கின்றது? என்ற விவரங்களை யாரும்