பக்கம்:கவிதை பயிற்றும் முறை.pdf/73

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதை விளக்கம் 窃置 பதற்கு விரும்புகின்றவர்கள் இப்பொழுது முயலலாம்; இவ்வாறு முன் வருபவர்களை நுட்பமாகக் கையாள வேண்டும். சாதாரண மாகச் சிறுவர்கள் படிப்பதற்கு உடனே ஆயத்தமாக இருப்பர். சற்று வளர்ந்தவர்கள் தன்னுணர்ச்சியின் காரணமாகத் தயங் குவர். அத்தகையவர்களைப் படிக்குமாறு கட்டாயப்படுத்துதல் சித்திரவதை செய்வது போலாகும். கவிதைப் பாடத்தின்பொழுது மாணாக்கர் அடையும் மகிழ்ச்சிக்கு எவ்விதத்திலும் ஊறு விளை வித்தல் கூடாது. ஒவ்வொருவரும் படிக்கக்கூடிய நாள் தானாக வரும்; அப்பொழுது அவர்கள் தாமாகவே படிக்க முன்வருவர். அப்பொழுதுதான் வாய்விட்டுப் படித்தலில் அவர்கட்குப் பயிற்சி தருதல் வேண்டும், கவிதையைப் படித்து அநுபவிப்பதற்கு இப் பயிற்சி மிகவும் இன்றியமையாதது. ஆகவே, அதனை மேற் கொள்ளத்தான் வேண்டும். ஆனால் ஒரு சமயத்தில் ஒன்றினைத் தான் செய்யவேண்டும்; அதனை உறுதியாகவும் மனநிறைவுடனும் செய்துவிடவேண்டும். நாம் கவிதையைக் கற்பிக்கும் பணியில் இறங்கினால், அத்துடன் அமைதி பெறவேண்டும்; வாய்விட்டுப் படித்தலை வேறொரு சமயத்தில் மேற்கொள்ளலாம், இன்றைய நிலை: ஆனால், இன்று தமிழ்நாட்டின் பள்ளி களில் நடப்பதை எண்ணினால் உள்ளம் வேகின்றது. கல்வித் துறையினர் முடிவுத் தேர்வு’ என்ற ஒன்றைப்படைத்துக்கொண்டு அதன் கோரத் தாண்டவத்திற்கு இரையாகின்றனர். மாணாக் கர்களின் உள்ளத்தைச் சிறந்த முறையில் உயர்த்தவல்ல கலை முறையே அவர்களின் உரத்தை-திராணியை-உறிஞ்சவல்ல கொலை முறையாக மாறியிருப்பதை அவர்கள் சிறிதும் எண்ணி பார்க்கவே இல்லை. பதவுரை, பொழிப்புரை, கருத்துரை, அணி, இலக்கணக் குறிப்பு என்ற சில வார்ப்பட முறைகளுக்குள்உண்மையாகச் சொல்லப் போனால் ஒருவகைச் சடங்கு முறைக் குள்-கவிதையை அடக்கிவிடும் முயற்சியே பயிற்றும் முறையாக இருந்து வருகின்றது. இந்த முறை ஒழியும் நாள் எந்நாளோ என்று 'எங்காட் கண்ணி' பாடி ஏங்க வேண்டியதைத் தவிர நாம் என்ன செய்யமுடியும்? இன்றைய மொழி வளர்ச்சிக்கு வேண்டாத பல இலக்கணப் பகுதிகளைத் தமிழ்ச் சிறுவர்கள் படிக்க வேண்டும் என்று நினைக் கும் மனப்பான்மை மிக கொடியது. காலங்கடந்ததும் உயர்ந்த உணர்ச்சிகளுக்கு வடிவந் தருவதுவுமான இலக்கியத்தைக் கற்ப தற்கு அவற்றிற்குச் சிறிதும் வேண்டாத - பொருள் விளக்கத் திற்குத் துணை செய்யாத-இலக்கணப் பகுதிகளைக் கவிதைப் பாடத்தில் எடுத்துக்காட்டிச் சிறுவர்களின் மூளையைத் தாக்கி