பக்கம்:கவிதை பயிற்றும் முறை.pdf/74

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

敬密 கவிதை பயிற்றும் முறை அவர்களை வேதனைக்குள்ளாக்கும் கொடுமையினும் வேறொரு கொடிய செயல் இல்லை. தண்டியலங்காரத்திலும், மாறனலங் காரத்திலும் வேண்டாத பகுதிகளாக காட்சியளிக்கும் பகுதிகளை உணர்ச்சியுள்ள கவிதையைக் கற்பிக்கும்பொழுது எடுத்துக் காட்டுவதால் யாது பயன்? இஃது என்ன அணி? அஃது என்ன அணி?’ என்று அவற்றின் பெயர் வகைகளைக் காண்பதில் செலுத்தப்பெறும் முயற்சி வீணானது: வெறுக்கத் தக்கது. தவிர, ஒரு பாட்டு இன்ன அணியுடையது என்று கூறிவிடுதல் பாடலைக் கற்றுணரும் திறமையும் அன்று; இது வெறும் பெயரிடும் சடங்கேயன்றி வேறொன்றும் இல்லை. பாடிய கவிஞன் உணர்ந்த அநுபவத்தைக் கற்பனைத்திறன் கொண்டு மாணாக்கர்கள் உணர்வதே கவிதையைக் கற்பிப்போரின் முதன் மையான நோக்கமாக இருத்தல் வேண்டும். பாநலம் வியத்தல் திறனே மாணாக்கரிடம் நிலையாக அமையவேண்டியது என் பதை ஆசிரியர்கள் என்றும் நினைவில் இருத்துதல் வேண்டும். இம்முறைதான் மாணாக்கர்கட்கு உவட்டாமல் இனிக்கும். கவிதையை வாய்விட்டுப் படித்தால்தான் கவிதையதுபவம் ஏற். படும். வாய்விட்டுக் கவிதைகளைப் படிப்பதில் மாணாக்கர் கட்குத் துணை செய்வது எங்ஙனம் என்பதை அடுத்த இயலில் &rsia Glimið.