பக்கம்:கவிதை பயிற்றும் முறை.pdf/76

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

镑盛 கவிதை பயிற்றும் முறை கின்றன. செவி நம் உடலில் மிக நுட்பமாக a೧rt565 ஒர் அற்புத உறுப்பு. நரம்புகளின் மென்மைக்கு ஓரி ri೧೧r அமைந்தது. உடலின் ஏனைய நரம்புகளையெல்லாம் தன் விருப் பத்திற்கிணங்க ஆட்டிவைக்கக் கூடிய ஆற்றலும் பெற்றது. இதனால்தான் கிளிக் கண்ணி', நொண்டிச் சிந்து', காவடித சிந்து என்ற பெயர்களைக் தேட்டவுடன் பழைய நண்பர்களின் குரல்கேட்பதுபோல், பழைய ஒலியமைப்பு மெல்லச் செவியில் கேட்கத் தொடங்குகின்றது. இன்றைய பேசும் படங்களின் பல பாடல்கள் பெருவாழ்பெற்று வருவதற்கு இந்த ஒலிக் கவர்ச்சியே காரணமாகும். வாய்விட்டு படிப்பதால் பெறும் அநுபவம்: மேற்குறிப்பிட்ட பாடல்களை நாம் மனத்தால் நினைந்துப் பார்த்து மகிழ்வதை விட அவற்றை நாமே வாய்விட்டுப்பாடி மகிழ்வதுசிறந்தது. அதற்கு இரண்டு காரணங்கள் உள. நாம் பாடும்பொழுது நாமே அவற் றைப் கேட்கின்றோம். நம்முடைய குரல் இனிமையானதாக அமையாவிடினும், அது நமக்குப் புலனாவதில்லை. அப்பாடல் களைக் கேட்க நேரிடும் பிறர் மகிழ்வதைவிட, நாம் உண்மையி லேயே அவற்றில் ஈடுபட்டு அநுபவிக்கின்றோம். இஃதுடன் அப் பாட்டில் நம்மிடையே எழுப்பப்பெறும் உணர்ச்சிகளும் எண்ணங் களும் வடிவம் பெறுவதற்கும் வாய்ப்பு கிடைக்கின்றது. பாடு வதால் நாம் அவற்றிற்கு வடிவம் தருகின்றோம். நாம் பாடலை வாழ வைக்கின்றோம்; அது நமக்கு உண்மையான மன நிறைவையும் மகிழ்ச்சியையும் அளிக்கின்றது. கவிதைப் பாடத் தில் நம்முடைய மாணாக்கர்கட்கும் இந்த அநுபவத்தைத்தான் பெறச் செய்யவேண்டும். பாட்டைப் பாடும் தேவையைப்போல் கவிதையை வாய்விட்டுப் படிக்கும் தேவை அவ்வாறு கட்டாயம் இல்லை என்பதை நாம் ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும். நன் றாக உணர்ச்சியுடன் படிக்கக் கேட்ட ஒரு கவிதையை வாய்க்குட் படிப்பதனாலேயே தன்றாக அநுபவிக்கலாம். ஆனால் நன்றாக பாடக் கேட்ட ஓர் இசைப்பாடலை. அவற்றின் சுர அடை யாளங்களை வாய்க்குள்ளேயே படிப்பதால், நன்றாக அநுபவிக்க முடியாது. கவிதைக்குரிய இஃது ஒரு தனிச் சிறப்பென்றாலும் அது கவிதைக்கு ஒர் இழப்பாகவும் அமைகின்றது. இதனால் பெரும்பாலோர் கவிதையிலுள்ள ஒலிநயத்தின் அழகை அநுபவிப்பதில்லை; கவிதையில் இசையும் உள்ளது என்பதை அவர்கள் மறக்கின்றனர். கவிதையின் பல நற்கூறுகளை அவர் கள் அநுபவிக்க முடியாமற் போகின்றது. ஒரு கவிதையை வாய்க் குள்ளேயே படித்து அதனை நன்கு உணர்ந்து விட்டதாக நினைக்