பக்கம்:கவிதை பயிற்றும் முறை.pdf/77

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதையை வாய்விட்டுப் படித்தல் 65 கும் சிலர், அக்கவிதை நன்முறையில் உரக்கப் படிக்கப்பெறும் பொழுது, அவர்கள் தாம் காணத் தவறிய பல கூறுகளைக் கண்டு, கேட்டு அநுபவிப்பதையும், சவிதையைப் படிக்காத பலர் பிறர் அதனைப் படிக்கக்கேட்பதால் பெருமகிழ்ச்சி கொள்தையும் நாம் அறியாமல் இல்லை. கவிதை அநுபவமாகும் முறையை விளக் குங்கால் இரண்டாம் நிலை என்ற தலைப்பில் கூறிய கருத்து களை ஈண்டு நினைவு கூர் க. ' நம்முடைய மாணாக்கர்கள் கவிதையை வாய்விட்டுப் படிக்க வேண்டுமானால் அதை நன்கு படிப்பதில் அவர்கட்கு எல்லா விதத் துணைகளையும் நாம் நல்கவேண்டும். வாயினால் உப தேசம் செய்வதை விட, ஆசிரியர் செய்து காட்டலே சிறந்தது: தாம் வாய்விட்டு நன்முறையில் படித்துக் காட்டி மாணாக்கர் கட்கு மகிழ்ச்சியூட்ட வேண்டும். சண்டிக் குதிரைமேல் நொண்டித்துரை-செய்யும் சவ்வாரி போலுமிவ் வாழ்வானில், உண்ட துடுத்ததை யன்றிநாம்-வேறெதும் உண்மையாய்க் கண்டதும் உண்டோ? அடா! கோர்ட்டிலே ஜட்ஜி இருப்பதுவும்-வக்கீல், கொட்டி முழக்கின் நின் றாடுவதும் கூட்டிலே கள்ளன் நடுங்குவதும்-இந்தக் கும்பி செயும்செயல் அல்லவோடா? உண்டு வயிறு நிறைந்துவிட்டால்-உடன் உள்ளக் கவலை ஒழிந்ததடா? மண்டை யுடைத்து வழக்குகள்பேசி-நாம் வாணாளை வீணாளாய்ப் போக்கோம், அடா! மஞ்சள் சிவப்புத் துணியணிவோம்-பஞ்ச வர்ணக் கிளிகளைப் போல்நடப்போம்; வஞ்சனை குதுகள் செய்யமாட்டோம்-கோர்ட்டு வாசலை எட்டி மிதிக்கமாட்டோம். ஆதிசிவனுமோர் ஆண்டி, அடா! -அவர்க்கு அன்பான பிள்ளைகள் நாமே, அடா! ஒதுமெய்ஞ் ஞானியர் யாவருமே-நமக்கு உற்ற உறவினர் ஆவார், அடா! 2. கவிதையது பவம் (முதற்பதிப்பு) பக் (1114-15, க-9