பக்கம்:கவிதை பயிற்றும் முறை.pdf/79

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதையை வாய்விட்டுப் படித்தல் 67 சிறந்த எடுத்துக்காட்டாக அமைகின்றது. ல - ழ - ளகர பேதத் திலும் ர - றகர பேதத்திலும் தக்க கவனம் செலுத்திப் பேச வேண்டும்; படிக்க வேண்டும். ஆசிரியர் தம்முடைய தொகுப்பிலிருந்து ஒரு கவிதையைப் படிக்க நேர்ந்தால் அவர் படிப்பதில் இயல்பாகவே சொல் திருத் தமும் ஒலிநயத்தில் திருத்தமும் தாமாகவே அமைந்துவிடும்; அவை இயல்பாகவே படிந்திருக்கும். பாடநூலிலுள்ள ஒரு கவிதையைப் படிக்க நேரிட்டால், அவர் முன்னரே படித்துப் பார்த்து ஆயத்தமாக வந்தால் அவை இயல்பாக அமைந்து விடும். வகுப்பிற்கு வருவதற்குமுன் ஆசிரியர் கவிதையின் கருத்தினை, அதில் வரும் சில கடின சொற்களின் பொருள் களை, அறிந்துகொண்டு வருதல் மட்டிலும் பாட ஆயத்தம் என்று கருதுவது தவறு. உச்சரிப்பு, ஒலிநயம், அழுத்தம் கொடுக்கவேண்டிய இடம், கவிதைக்கேற்ற இசையில் படித்தல்போன்ற பல கூறுகளிலும் கவனம் செலுத்தி, ஒத்திகை நடத்திக் கொண்டு வருதலும் பாடஆயத்தத்தில் அடங்கும் என்பதை இளம் ஆ சிரி ய ர் கள் உணரவேண்டும். மேம்போக்காகக் கருதினால் இவை பாடத்தின் புறக் கூறுகளாகத் தென்படலாம் : ஆழ்ந்து சிந்தித்தால் இவைதான் பாடவெற்றிக்குப்பெருந்துணை செய்பவை. இதந்தரு மனையின் நீங்கி இடர்மிகு சிற்ைப்பட் டாலும் பதந்திரு இரண்டும் மாறிப் பழிமிகுந் திழிவுற் றாலும் விதந்தரு கோடி இன்னல் விளைந்தெனை அழித்திட் டாலும் சுதந்திர தேவி! நின்னைத் தொழுதிடல் மறக்கி லேனே." என்ற பாட்டை வகுப்பில் படிக்க வேண்டிய வாய்ப்பு வருகின்ற தாகக் கருதுவோம். இந்தப் பாடலில் திரும்பத் திரும்ப வரும் ஒலியமைப்பு, அதனால் நமக்கு ஏற்படும் மகிழ்ச்சி, பாட்டில் வரும் உணர்ச்சி சிதறாமல் காக்கப்பெறும் முறை ஆகியவற்றை ஆசிரியர் முன்னதாகவே நன்கு உணர்ந்திருந்தால்தான் அதனை வகுப்பில் நன்கு படிக்கமுடியும். எளிய பாடல் தானே என்று கைiசிக் கொண்டு வகுப்பில் நுழைந்தால் படித்தலில் வெற்றி காண முடியாது. 4. பாரதியார் கவிதைகள்.சுதந்திர தேவியின் துதி-1