பக்கம்:கவிதை பயிற்றும் முறை.pdf/80

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#8 கவிதை பயிற்றும் முறை மாணாக்கர்கட்குப் பயிற்சி: ஆசிரியருக்கே இவ்வளவு ஆயத்தம் வேண்டும்பொழுது, மாணாக்கர்கட்குப் பாடல்களைப் படிப் பதில் எவ்வளவு பயிற்சி வேண்டும் என்று சொல்லத் தேவை யில்லை. மாணாக்கர்களின் பேச்சுப் பழக்கத்தில் கவனம் செலுத்துதல் வேண்டும்; அது திறம்பட அமைவதற்குரிய கூறுகள் அனைத்திலும் நன்கு பயிற்சி தருதல் வேண்டும். இஃது ஒரே கவிதைப் பாடத்தில் முடியக் கூடியதன்று; ஓராண்டு முழுவதும் தரும் பயிற்சியாலும் எய்தக் கூடியதன்று. பள்ளி வாழ்க்கை முழு வதிலும் மாணாக்கர்கள் இப்பயிற்சியைப் பெறுதல் வேண்டும். பாடலைப் பயிற்றும்பொழுது சொல் திருத்தத்திலும் ஒலிநயத் திருத்தத்திலும் அதிகக் கவனம் செலுத்துதல் வேண்டும். கவிதை சரியாகப் படிக்கப்பெறுகின்றதா என்பதற்கு ஒரு சோதனை உண்டு. 'கவிஞன் இதை இப்படித்தான் சொல்வானா?” என்ற வினாவிற்கு ஏற்ற விடை கண்டுவிட்டால், கவிதையைப் படிப் பதில் வெற்றி கண்டதாகக் கொள்ளலாம். படிக்கும்பொழுதே பாடலின் பொருள், அதிலுள்ள உணர்ச்சி கட்டவிழ்த்துக் கொண்டு வெளிவர வேண்டும். ஓர் எடுத்துக்காட்டைக் காண் போம். துச்சாதனன் திரெளபதியை மன்றுக்கு இழுத்து வரு கின்றான்; அவள் ஆடையைக் களைய முனைகின்றான். இந்தப் "பீடையை நோக்கும் வீமனிடம் வெஞ்சினம் கிளர்ந்து எழு கின்றது. அவன் தருமனை நோக்கிக் கூறும் சொற்களையும் அதற்குப் பார்த்தன் கூறுவதையும் பாரதியார் எங்ங்ணம் காட்டு கின்றார்? என்பதைக் காண்போம், வீமன் சொல்வது 'சூதர் மனைகளிலே-அண்ணே! தொண்டு மகளிருண்டு. சூதிற் பணயமென்றே-அங்கோர் தொண் டச்சி போவதில்லை. 'ஏது கருதிவைத்தாய்?-அண்ணே யாரைப் பணயம் வைத்தாய்? மாதர் குலவிளக்கை-அன்பே வாய்ந்த வடிவழகை; "பூமி யரசரெல்லாங்-கண்டே போற்ற விளங்குகிறான் சாமி, புகழினுக்கே-வெம்போர்ச் சண்டனப் பாஞ்சாலன்: