பக்கம்:கவிதை பயிற்றும் முறை.pdf/82

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70 கவிதை பயிற்றும் முறை "தருமத்தின் வாழ்வதனைச் சூது கவ்வும்: தருமமறு படிவெல்லும்”எனும் இயற்கை மருமத்தை நம்மாலே உலகங் கற்கும் வழிதேடி விதி.இந்தச் செய்கை செய்தான். கருமத்தை மேன்மேலுங் காண்போம். இன்று கட்டுண்டோம்; பொறுத்திருப்போம்; காலம்மாறும்; தருமத்தை அப்போது வெல்லக் காண்போம்; தனுஉண்டு காண்டீபம் அதன்பேர்’ என்றான்." வீ ம ன் சொல்வதிலும் அர்ச்சுனன் சொல்வதிலும் உணர்ச்சி வேறுபாடு உண்டு; அதற்கேற்றவாறு கவிதையின் யாப்புகளிலும் வேறுபாடு அமைந்துள்ளது. முதலாவதில் சின உணர்ச்சி பொங்கி வழிகின்றது; இரண்டாவதில் அடக்கமும் பொறுமையும் நிறைந்துள்ளன; ஆனால், சினக் குறிப்பும் அதில் நிழலிடுகின்றது. பாடல்களைப் படிக்கும்பொழுது மாணாக்கன் தன்னை வீமனாகவும் அர்ச்சுனனாகவும் நினைத்துக்கொண்டு படிக்க வேண்டும்; அவர்கள் உணர்ச்சி கவிதைகளில் வெளிப் படுதல் வேண்டும். கவிஞன் தன்னை அவ்வாறு நினைத்துதானே அப்பாடல்களைப் பாடியிருப்பான்? வகுப்பில் ஒருவர் படித்ததை ஏனையோர் 'திறனாய்தல் வேண்டும். ம் ா னா க் க ன் படித்ததை ஆசிரியரும் உற்சாகம் ஊட்டிப் புகழ்தல் வேண்டும்; பாராட்டுதலும் வேண்டும். நாளடைவில், படிப்படியாக, மாணாக்கர்கள் பாடல்களை நன்கு படிப்பர்; அவற்றின் பொருளும் தெளிவாகும்: உணர்ச்சியும் அழகும் நன்கு புலப் படும். அடிக்கடிக் கவிதைகளைப் படித்துக் குறைநிறைகளைக் காணும் வாய்ப்புகளை மாணாக்கர்கட்குத் தந்தால், அவர் கள் நிறைந்த பயனை எய்துவர். பள்ளியை விட்டபிறகு கவிதை களை நன்கு படிக்கும் வாய்ப்பும் கிடைப்பது அரிது, எனவே, மாணாக்கர்கள் விரும்பும் பாடல்களை மட்டிலுமாவது நன்கு படிக்கும் பழக்கமும் அவற்றைக் கேட்டு மகிழும் இன்பமும் பள்ளியில் கிடைக்கச் செய்தல் மிகவும் இன்றியமையாதது. கவிதையை படித்தலே முக்கியம்: கவிதை கற்பித்தலைப் பற்றி முன்னரே கூறியுள்ளோம். கவிதை கற்பிக்கும்பொழுது கவிதையைப் படித்தலே மிகவும் முக்கியம் என்றும் வற்புறுத்தி னோம். அதையே ஈண்டு மீண்டும் வற்புறுத்துகின்றோம். எந்தக் கவிதையைக் கற்பிக்க நேர்ந்தாலும் அதைக் கிட்டத் தட்ட ஆறு தடவையாவது படித்துக் காட்டவேண்டும். இன்றைய 5. பாரதி: பாஞ்சாலி பதம் - பாடல்கள் (278-288)