பக்கம்:கவிதை பயிற்றும் முறை.pdf/83

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதையை வாய்விட்டுப் படித்தல் 7 : பாடத்திட்டத்தில் உயர்நிலைப் பள்ளியில் அதிகமாகக் கவிதை களைக் கற்பிக்க வாய்ப்புகள் இல்லை. என்றாலும், கவிதை களைக் குழந்தைகட்குப் படித்துக் காட்டுவதற்குக் காலம் ஒதுக் கத்தான் வேண்டும். படிக்கவேண்டிய முறையில் கவிதையைப் படித்தால், நாம் சொல்லுவதைவிடக் கவிஞன் மிக அருமை யாகச் சொல்லுவான். நாம் ஏதாவது ஒரு கவிதையை ஒரு வகுப் பிற்குப் படித்துக் காட்டினால், ஒரு சிலருக்கு அக்கவிதை சிறிதும் பொருந்தாதிருக்கக்கூடும்; அஃது அவர்கள் மனத்தைச் சிறிதும் கவர்வதில்லை. ஆனால், எல்லோரும் கவிதையை உணர்ந்து படிக்கவேண்டும் என்பது நம் நோக்கமாக இருத்தல் வேண்டும். இந்நோக்கம் நிறைவேற வேண்டுமாயின், பல்வேறு கவிதை வகைளை வகுப்பில் படிக்கவேண்டும். இதனால் சில கவிதை களாவது ஒவ்வொரு குழந்தையின் உள்ளத்தைத்தொடும்; அதனுடைய கற்பனையைக் கிளர்ந்தெழச் செய்யும். எனவே, இயன்றவரை ஆசிரியர் பல்வேறு முறைகளில் கவிதை குழந் தைக்கு முறையீடு செய்யும் வாய்ப்புகளை நல்கவேண்டும். நாம் ஒரு கவிதையைக் கற்பிக்காவிடினும், நாம் அதைப்பற்றி ஒன்றுமே சொல்லக்கூடாது என்பது பொருளன்று. ஒருசில கடின சொற்களுக்குப் பொருள் கூறலாம்; ஒரு சிலவற்றின் நயத்தைச் சுட்டலாம். இதற்கு அதிகக் காலமும் ஆகாது. இது கவிதையைப் புரிந்துகொள்வதற்கும் துணை புரியக்கூடும். ஆனால், கவிஞன்தான் மாணாக்கர்களுடன் அதிக நேரம் பேச வேண்டும். ஒரு பாடவேளையைப் பாரதியாருடன் கழிக்கலாம்; ஒரு பாடவேளையைக் க வி ம ணி யு ட ன் போக்கலாம்: ஒரு பாடவேளையைப் பாரதிதாசனுக்கு தரலாம்; ஒரு பாட வேளையைக் கட்டபொம்பன் கதை, அல்லி அரசாணிமாலை, பவளக்கொடி மாலை. தேசிங்குராசன்கதை போன்ற கதை பொதி பாடல்களில் செலவழிக்கலாம். இங்ங்னமே ஒரு பாடவேளையை மானாக்கர்களின் கவிதைத் தொகுப்பிலும், ஒரு பாட வேள்ையைத் தற்காலக் கவிதைகளின் தொகுப்பிலும். ஒரு பாட வேளையைத் தனிப்பாடல் திரட்டிலும் போக்கலாம். ஒவ்வொரு கவிதையையும் இரண்டு தடவையாவது படித்தல் வேண்டும்: குழந்தைகளே கவிதைகளைப்பற்றிய கருத்தினை அடைவதற்குச் சிறிது காலமாவது தருதல் வேண்டும். திறனாய்வதற்கு வாய்ப்பு கள் தந்து அதில் அவர்கட்குப் பயிற்சியும் அளித்தல் வேண்டும், கவிதைக்குரிய பாடவேளை இயன்றவரை களிப்பூட்டும் பாட வேளையாக, புதிய அழகான பொருள்களைக் காணும்நேரமாக. அமைதல் சாலப் பயன்தரும்; ஏற்கெனவே அவர்கள் அறிந்த கவிதைகளைப்பற்றிச் சிந்திக்கும் பாடவேளையாகவும் அமைய