பக்கம்:கவிதை பயிற்றும் முறை.pdf/85

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதையை வாய்விட்டுப் படித்தல் 73 களில் பயில்வோர்களை எழுத்தர் வேலைக்கும், பொறியியல் வல்லுநர் தொழிலுக்கும், உழவுத் தொழிலுக்கும் ஆயத்தம் செய்கின்றோம் என்ற குறுகிய நோக்கத்திற்கே இடந்தரலாகாது; அத்தகைய குறுகிய கருத்தினை எதிர்த்துப் போராடவேண்டும். இது பரந்ததொரு கல்விமுறையால்தான் சாத்தியப்படும். கவிதை பயிலுவதுபற்றிய இன்றைய நிலைமை மிகவும் வருந்ததக்கதாக உள்ளது. கவிதையைத் தவிர வேறு எல்லா வற்றையும் மாணாக்கர்கள் பயிலுகின்றனர். பெரும்பாலான மொழியாசிரியர்கள் கவிதைப் பாடத்தில் கவனத்தைச் செலுத்தி முறைப்படி நடத்துவதில்லை. கவிதைகளின் கருத்துகளையும் வேண்டாத இலக்கணக் குறிப்புகளையும் தருகின்றனரேயன்றி, கவிஞன் உள்ளத்தை அ வ ர் க. ட் கு க் காட்டுவதில்லை. தேர்வு கவிஞன் நோக்கத்தை உணர்த்துவது மில்லை. தேர்வு முகைளும் எரிகின்ற நெருப்பில் எண்ணெய் ஊற்றியது போல இந்நிலையைப் பின்னும் கேடாக்கி விடுகின்றன. எங்கும் * உரைநூல்' மயமாகக் காட்சி அளிக்கின்றது, வினா-விடை நூல் கள் பல்கிப் பெருகிவருகின்றன. வாமன அவதாரம்போல் காணும் பாட நூல் உரைநூல் வடிவத்தில் திரி விக்கிரமாவதாரம்போல் வடிவு எடுக்கின்றன! பாட நூல்களிலுள்ள கவிதைகளைப் பற்றியே மாணாக்கள் கவலைப்படுவதில்லை. கவிதையைப் படித் துச் சுவைக்க வேண்டும் என்ற நெறியையும் ஆசிரியர்கள் காட்டுவதில்லை. சில ஆசிரியர்கள் உரைநூல்களை வாங்கும் படியும் தூண்டுகின்றனர். தாமும் ஒர் உரைநூலை மறைநூல்’ போல் வைத்துப் போற்றுவது பின்னும் நம் வருத்தத்தை மிகுவிக் கின்றது. இக்கொடுமையிலிருந்து மாணாக்கர்கள் உய்ந்து கவிதை களைச் சுவைக்கும் நாள் எந்நாளோ? இதற்கு ஆண்டவன்தான் வழிகாட்ட வேண்டும். இவ்விடத்தில் டாக்டர் ஜான்சன் என்ற ஆங்கில மேதை தன்னுடைய செகப்பிரியரின் நாடகப் பதிப்பின் நூல் முகத்தில் கூறியிருக்கும் கருத்துகள் கம்பனையோ, இளங்கோவையோ சேக்கிழாரையோ, திருத்தக்க தேவரையோ படிக்கும் நம் மாணாக்கர்கட்கும் முற்றிலும் பொருந்தும். அவர் கூறுவார்: 'குறிப்புகள் தேவையே. ஆனால், அவை தேவையான கொடுமைகள். செகப்பிரியரின் ஆற்றல்களைப்பற்றி அறியாத மாணாக்கன்-ஆனால் அந்த நாடகம் நல்கக்கூடிய உயர்ந்த இன் 6, gyrả, gp * ữ - Preface 7. கொடுமை . Evil க-10