பக்கம்:கவிதை பயிற்றும் முறை.pdf/86

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 கவிதை பயிற்றும் முறை பத்தைப் பெற விரும்பினால்-உரையாசிரியர்களையோ திறனாய் வாளர்களையோ கடைப்பிடிக்காமல் ஒவ்வொரு நாடகத்தையும் முதற் காட்சியிலிருந்து இறுதிக் காட்சிவரை படிப்பானாக, அவனுடைய கற்பனை, சிறகு பெற்றுப் பறக்கத் தொடங்கிவிட் டால், அதன் திருத்தத்திற்கோ விளக்கத்திற்கோ இடந்தர லாகாது. அவனுடைய கவனம் உரமாக ஈடுபட்டிருக்கும் பொழுது, தியபால்டு”, போப்” போன்ற பெயர்களையே புரட்டு வதற்கு வெறுப்பு ஏற்படட்டும். அவன் விளக்கம் பெற்றும், பெறாதும் படிக்கட்டும்; நேர்மையான பகுதியையும் நேர்மை யற்ற பகுதியையும் படிக்கட்டும். அவன் உரையாடலின் (Dialogue) பொருளுணர்ச்சியையும், கதையிலுள்ள கவர்ச்சியையும் காக்கட் டும். புதுமையில் கண்ட மகிழ்ச்சி குறையத் தொடங்கியதும். அவன் சரியான உரைக்குப் போகலாம். உரையாசிரியர்களை யும் படிக்கலாம்.” "ஒரு குறிப்பிட்ட பகுதிகள் குறிப்புகளால் விளக்கம் அடை யத்தான் செய்கின்றன. ஆனால், நூலைப் படிப்பதாலுண்டா கும் பொதுப்பயன் தளர்ச்சியடைகின்றது. அடிக்கடிக் குறுக்கீடு நிகழ்வதால் மனம் உறைந்து விடுகின்றது! முதல்நிலைப் பொருள் களிலிருந்து எண்ணங்கள் சிதறிப் போகின்றன; படிப்போருக்குச் சோர்வும் ஏற்படுகின்றது; அதற்குரிய காரணமும் அவருக்குப் புலப்படுவதில்லை; இறுதியாக அவர் விடாமுயற்சியுடன் படித்த நூலை விட்டெறிந்து விடுகின்றார்.' 'நூல் முழுவதையும் பார்ப்பதற்கு முன்னர், பகுதிகளை ஆராய்தல் கூடாது; எந்தப் பெரிய நூலையும் அதன் முழு அமைப்பையும்பற்றிச் சரியான முறையில் பொருளுணர வேண்டு மாயின், நம் அறிவு நிலை ஒரு விதத் தொடர்புமின்றி இருத்தல் இன்றியமையாதது; நெருங்கி அணுகுவதால் சிறு நுட்பங்கள் புலனாகின்றன என்பது உண்மைதான்; ஆனால் முழுமையின் அழகு நமச்குச் சரியாகப் புலனாவதில்லை. கல்வி நிலையங்களில் நடைபெறுபவை: கம்பராமாயணத் தையோ, சீவக சிந்தாமணியையோ, சிலப்பதிகாரத்தையோ படிக்க விரும்பினால், நாம் முதலில் மூல நூலைப் படிக்கவேண் டும்; அக்காவியங்களை இயற்றிய கவிஞர்களே முதலில் நம் முடன் பேசுதல் வேண்டும். அப்பொழுதுதான் அக்காவியத்தை இயற்றிய கவிஞர்களின் உள்ளங்களை அறிதல் இயலும். அதன் பிறகுதான் திறனாய்வு நூல்களுக்குப் போகவேண்டும். அக் 8 ěuuuir &@ • Theobałd 9 Gurio - Pope