பக்கம்:கவிதை பயிற்றும் முறை.pdf/87

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதையை வாய்விட்டுப் படித்தல் 75 காவியங்களைப்பற்றி நமக்கென்று ஒரு கருத்து ஏற்பட்ட பிறகு திறனாய்வாளர்களின் நூல்களைப் படித்தால் நாம் அவற்றை நன்கு சுவைக்க முடியும். எனவே, பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் முதலில் மூல நூல்களைப் படித்துச் சுவைக்கும் பயிற்சியை வற் புறுத்துதல் வேண்டும்; அதற்கேற்ற வாய்ப்புகளையும் நல்க வேண்டும். மூலத்தைப் படிக்க மலைப்பு தட்டினால் அதன் சுருக் கத்தையாவது முதலில் படிக்க வேண்டும். எடுத்துக்காட்டாகச் 'சீவகசிந்தாமணியைப் படிக்க முடியாவிட்டால் 'சீவகசிந்தா மணிச் சுருக்கத்தை'யாவது முதலில் படிக்கவேண்டும். அதன் பிறகுதான் சிந்தாமணி ஆராய்ச்சி'க்குள் புகவேண்டும்: அதை எடுத்துப் படிக்கவேண்டும். ஆனால், பெரும்பாலும் இன்றைய பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் நடைபெற்று வரும் கற்பிக்கும் முறைகள் மிகவும் வருத்தத்தை விளைவிப்பனவாக்வுள்ளன. முமுவதையும் கற்பிக்கக் காலம் போதவில்லையென்று எத் தனையோ விதமான குறுக்கு வழிகளை மேற்கொள்ளுகின்றனர் ஆசிரியர்கள். மூல நூல்களைச் சரியான முறையில் கற்பிக்க நேரம் போதவில்லையென்றால், அவற்றைத் தவறான முறைகளில் மட்டிலும் கற்பிப்பதற்குக் காலம் எப்படிக் கிடைக்கிறது? என்பதுதான் தெரியவில்லை. மூல நூலை விட மூல நூலைப் பற்றிய நூல்தான் மிகவும் முக்கியமா? எட்டுத்தொகை நூல் களில் உள்ள பாடல்களைப் படித்து நன்கு சுவைத்த பிறகு தான் அவைபற்றிய 'சொற்பொழிவு நூல்'களுக்குப் போக வேண்டும். தமிழ் எம். ஏ. போன்ற தேர்வுகளுக்குப் பயிலும் மாணாக்கர்கள் பாடப்பகுதியாகவுள்ள பாடல்களைப் பயிலாம லேயே சொற்பொழிவு நூல்களைக் கொண்டே காலம் தள்ளு கின்றனர்". சிலர் மூல நூல்களைத் தேர்வுக்காலம் முழுவதிலும் ஒரு தடவைகூடப் படிப்பதில்லை. படிக்க வேண்டும் என்ற கவலையும் இல்லை; அக்கறையும் இல்லை. கவிதைச் சுவையை அறியாமலேயே தேர்வுகள் எழுதி அவற்றில் முதல்தரமான' வெற்றியும் அடைந்து விடுகின்றனர்! தேர்வுக்காலத்தில் கூட அவர்கள் மூல நூல்களைப் படிக்காவிடில் அவர்கள் வாழ்நாளில் என்றுதான் அவற்றைப் படிக்கப் போகின்றார்களோ? யாம் அறியோம். கல்லூரிகளில்தான் மேற்கூறியபடி நடைபெறுகின்றது என் றால், உயர்நிலைப் பள்ளிகளின் நிலைதான் என்ன? அங்கும் இதே அவல நிலைதான். குகப்படலமோ அங்கதன் தூதுப்படலமோ பாடமாக வந்திருந்தால் மாணாக்கர்கள் அப்பகுதியிலுள்ள பாடல்களை நன்கு படித்துச் சுவைத்து அநுபவிப்பதில்லை. மூல பாடல்கனைவிட அவற்றின் சுருக்கங்களையும். வினா விடை