பக்கம்:கவிதை பயிற்றும் முறை.pdf/9

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

viii வண்ணத் துணிகளை வேகமாக விரித்துக் காட்டும்போது அவை நம் கண்ணைக் கவர்வது போல் உலக ஊழியனாரின் பாட்டிசை என் கருத்தைக் கவர்ந்தது. சொற்பொருளை ஏற்ற இடங்களில் கூறிக் கொண்டே பாட்டைப் பலமுறை பாடியே பொருநராற்று படையை அற்புதமாகக் கற்பித்து விட்டார். இவர் ஒரு மேடை பில் "எண்டருங்கடை' (அயோ. கைகேயி சூழ்வினை-31) என்ற கம்பன் பாட்டையும் "தையல் துயர்க்கு’’ (நளவெண்பா-2:107) என்ற பாடலையும் இசையுடன் பாடி ஒப்பிட்டு விளக்கம் தந்தது இன்றும் அவ்விளக்கத்தைக் கேட்பது போன்ற உணர்வு ஏற்படு கின்றது. அடுத்து சென்னையில் (1944இல்) அகநானூறு-களிற்றி யானை நிரையில் 50 பாடல்களைக் கற்பித்தவர் காஞ்சிபுரம் தொண்டை மண்டல முதலியார் மடத் தலைவர் தவத்திரு. ஞானப்பிரகாச சுவாமிகள். இவர்பூர்வ ஆசிரமம் திரு. முத்து க. மாணிக்கவாசக முதலியராக இருந்தபோது சென்னைப் பல் கலைக்கழகம் சீறாப்புராணம் பதிப்பிக்கும் பணியில் ஈடுபட்டு இருந்தார். அப்போது பன்மொழிப் புலவர் திரு. வே. வெங்கட ராஜுலு ரெட்டியார் இல்லத்தில் இவரிடம் பாடம் கேட்கும் வாய்ப்பு ஏற்பட்டது. கடின சொற்களின் பொருளை விளக்கிக் கொண்டே பாடல்களை இசையுடன் பாடுவார். பாடலின் இறுதியடியைப் பிடித்துக்கொண்டு கீழிருந்து மேலே போவார். சரியாக முடிச்சினை அவிழ்த்துவிட்டுச் சிவகாசி வெடிச்சரங்களை ஆட்டும் போது வெடிகள் தனித்தனியாக ஒடுவதுபோல், இவர் பாடலைக் கீழிருந்து மேலே பாடிக் கொண்டு போகும்போது சொற்களின் பொருளும் பாட்டின் முழுப் பொருளும் பாடலிலிருந்து கட் டவிழ்த்துக் கொண்டு என் மனதில் பாய்ந்து விடும். பின்னர் (1949இல்) காரைக்குடியில் நடைபெற்ற கம்பன் திருநாளுக்குச் சென்றிருந்தபோது டி. கே. சி. கானாள நிலமகளைக் (யுத்த மீட்சி-223) என்ற கம்பராமாயணப் பாடலையும கிள்ை களாய்க் (குற்றாலக் குறவஞ்சி பாயிரம்-3) என்ற திரிகூட ராசப்ப கவிராயரின் பாடலையும் இரண்டு பொழிவுகளில் விளக் கினமை இன்று கேட்பதுபோல் உள்ளது. பேச்சைக் கேட்ட பலர் வீட்டிற்குத் திரும்பும்போது பாடல்களைச் சொல்லிக் கொண்டே போவதையும் கண்டேன். பாடல்கள் கேட்போருக்கு மனப் பாடம் ஆகிவிட்டன! இவற்றையெல்லாம் அறியும் நாம் ஆந்திர அன்பர் (ஏன்? நானும் கூடத்தான்) மாம்பழத்தை உண்னும் முறையை நினைத்துக் கொள்ளவேண்டும். நான் காரைக்குடியில் ஆசிரியப் பயிற்சிக் கல்லூரியில் தமிழ் பயிற்றும் முறைப் பேராசிரியனாக இருந்த பொழுது (1950-60)