பக்கம்:கவிதை பயிற்றும் முறை.pdf/90

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78 கவிதை பயிற்றும் முறை கல்வி முறைகள் யாவும் விளையாட்டின் அடிப்படையில்தான் அமையும். ஆசிரியர் கவிதையை விரும்பிச் சுவைத்தால், அவர் கவிதை யைப் படித்தலால் மாணாக்கர்களிடம் சுவை காணும் திறனை எழுப்பிவிடமுடியும்; அவர்களுடைய கற்பனை ஆற்றலைக் கிளர்ந் தெழச் செய்தலும் கூடும். மாணாக்கர்கள் தம் கற்பனையின் துணையால் கவிதை உலகில் உலவும் பழக்கத்தைப் பெற்று விட்டால், அவர்கள் எல்லையற்ற இன்பத்தைப் பெறுவர். ஆசிரி யர் தாம் கவிதையைப் படித்தலால் இத்தகைய பழக்கத்தை மாணாக்கர்களிடம் ஏற்படுத்தி விட்டால், அஃது அவருடைய முழு வெற்றியாகும். இப்பயிற்சியைக்கொண்டே நாளடைவில் மாணாக்கர்கள் தாமாகாவே கவிதையுலகினில் புகுவதற்கு முனைவர்; தாமாகவே பல பாடல்களைப் படித்தும் சுவைப்பர். தாம் படித்துச் சுவைக்கும் பாடல்களைத் திரட்டி வைக்கும் பழக்கமும் அவர்களிடம் இயல்பாகவே அமையும். கவிதைபற்றிய அகன்ற படிப்பைப்பற்றி ஒன்று இவ்விடத்தில் குறிப்பிடலாம். பாடப் பகுதிகளில் உள்ள பாடல்களைத் தவிர வேறு பல நல்லபாடல்களைப் படிக்கவேண்டுமானால், கவிதைக் கழகம்’ என்ற ஒரு கழகத்தைப் பள்ளியில் தொடங்கி அதில் இந்த அகன்ற படிப்பை மேற்கொள்ளலாம். வாரத்திற்கு ஒரு நாள் ஒரு மணி நேரம் இதற்கென ஒதுக்கி வைத்தால் போதுமானது. விடுமுறை நாட்களில்கூட மாலை நேரத்தில் இதனை மேற் கொள்ளலாம். இக் கவிதைக் கழகத்தில் ஆசிரியர் கலிங்கத்துப் பரணி, குற்றாலக் குறவஞ்சி, முக்கூடற் பள்ளு, பாரதியின் பாஞ்சாலி சபதம், பாரதிதாசனின் சில நூல்கள் போன்ற எளிய சில சுவையான நூல்களை நல்ல முறையில் படித்து மாணாக்கர்களி டம் கவிதைச் சுவையை எழுப்பலாம். மாணாக்கர்களையும் தாம் படித்த கவிதைகளைச் படிக்கச் செய்யலாம். எதற்கும் மனம் இருந்தால் வழி பிறக்கும்.