பக்கம்:கவிதை பயிற்றும் முறை.pdf/94

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82 கவிதை பயிற்றும் முறை என்று கூறுவான். "ஆயிரம் யானைகள், பதினாயிரம் தேர்கள், ஒரு கோடி குதிரைகள், ஆயிரம் சேனைக் காவலர்கள் இறந்து பட்டால், தலையில்லாத பேய்(கவந்தம்) ஒன்று எழுந்து ஆடுமாம். ஆயிரம் கவந்தங்கள் ஆடினால் இராமனது கோதண்டத்தில் கட் டிய அழகிய மணி ஒருமுறை கணில்"என்று ஒலிக்குமாம்.ஆனால், இராமனது மூலபலவதைப் போரில் அம்மணி தொடர்ந்து. தீயணைக்கும் படையினர் செல்லும் மோட்டார் வண்டி யில் ஒலிக்கும் மணிபோல்,ஏழரை நாழிகை ஒழித்ததாம். கவிஞன் கூறும் இந்த உண்மையைக் கொண்டு அழிந்துபட்ட மூலபலச் சேனையின் அளவினை ஒரளவு நம் மனத் திரையில் அமைத்துக் கொள்ள முடிகின்றது. மூலபலத்தின் அளவை நாம் நன்கு உணர்ந்து கொள்ளுகின்றோம். கணித உண்மையைவிடக் கவி ஞன் கூறும் உண்மை இதற்கு நன்கு பயன்படுகின்றது. இதிலிருந்து கவிதை யுண்மையின் தன்மையை ஒருவாறு நாம் புரிந்துகொள்ள லாம். மெய்ம்மைகளை (Facts) அப்படியே கூறுவது கவிதை யுண்மை யன்று; மெய்ம்மைகளைத் திரித்துக் கூறுவதும் அஃ தன்று. மெய்ம்மைகளை அப்படியே கூறுவது அறிவியல்; அவற்றைத் திரித்துக் கூறுவது பொய்ம்மை; புனைந்துரை. ஆனால் கவிதையுண்மை என்பது மெய்ம்மைகளை உணர்ச்சி யுடன் உணரச் செய்வது; அது நம் உள்ளத்தில் இன்ப உணர்ச்சி யையோ, துன்ப உணர்ச்சியையோ நம்பிக்கையையோ அச்சத் தையோ, வியப்பினையோ சமய ஈடுபாட்டையோ எழுப்பவல் லது. எனவே, கவிதையுண்மை என்பது பொருள்களை இருந்த படியே எடுத்துரைப்பதன்று; அவற்றின் அழகையும் மர்மத்தை யும், அவற்றின்கவர்ச்சியையும் அவை நமக்குப் பொருள் விளக்கம் தரும் முறையினையும் எடுத்துரைப்பதாகும்". சுருங்கக்கூறினால், கவிதையுண்மை என்பது கற்பனை மூலமும் உணர்ச்சிகளின் மூலமும் நம் வாழ்க்கையின் உண்மையை எடுத்துரைப்பதாகும். வாழ்க்கையிலும் மனிதப் பண்பிலும் உள்ள பொதுத்தன்மையை எடுத்துக் கூறுவதே கவிதையின் நோக்கமாகும். வாழ்க்கை யுண்மைகள்: வாழ்க்கை என்பது நிலைபேறுடை யது; மனித இனம் இவ்வுலகில் உள்ளவரைத் தொடர்ந்து நடை பெறுவது. வாழ்க்கையில் இன்பங்களும் உள்ளன; துன்பங்களும் நிறைந்திருக்கின்றன; அல்லல்களும் தொல்லைகளும் காணப் பெறுகின்றன. ஆன்மாவைக் கொல்லும் பாவம் என்ற புற்று நோய் அங்கு உண்டு; ஆழங் காணமுடியாத காதல் அங்குக் காணப்படும். வாழ்வை வளமாக்கும் நம்பிக்கை, புகழ் மணக்கச் செய்யும் துணிச்சல் போன்ற பண்புகள் அதில் இடம் பெறும். இத் 7. Hudson, W. H. An introduction to the Study or Literature p 79