பக்கம்:கவிபாடிய காவலர்.pdf/17

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

11


பிறப்பு" என்றும் கூறியவர். இத்தகைய வரும் தம் வாழ்க்கைத் துணைவியார் வாசுகி அம்மையார் இறந்தபோது, அவ்வம்மையாரது பிரிவாற்றாமைக்காக,

"அடிசிற்கு இனியாளே ! அன்புடையாளே ! படிசொல் தவறாத பாவாய்!-அடிவருடிப் பின்துங்கி முன் எழுந்த பேதையே! போதியோ! என்தூங்கும் என்கண் இரா."

என்று பாடித் தம் துன்ப நிலையைத் தோற்று வித்தாராயின், இறப்பின் பிரிவைப் பற்றி என்ன கூற இயலும் ! ஒரு சிலர் மேலே குறிப்பிட்ட நிகழ்ச்சி வள்ளுவர் வாழ்க்கையில் கண்ட உண்மைக் குறிப்பன்று ; இது தனிப் பாடல் நூலின் பாடற்கியையக் கட்டிவிட்ட கர்ணபரம்பரைச் செய்தி என்று கூற முன் வரலாம். கர்ணபரம்பரைச் செய்தியே என்றாலும், இதில் ஒர் உண்மை வெளியாகிறது அல்லவா? அதாவது பேர் அறிஞர் ஆயினும், தம் உடனுறை மக்கள் மண்ணுல கிடைப் பிரிந்து விண்ணுலகு புகுந்தால் வருந்தாது இரார் என்பதன்ருே ? அதிலும், தம் வாழ்க்கைக்கே துணையாக உள்ள இல்லக்கிழத்தியார் இறந்தால் மிகுதியும் ஏக்கம் கொள்வர் என்பது அறிய வருகின்றதன்றோ ? எனவே, ஈண்டுச் சேரர் குலமன்னராம் சேரமான் கோட்டம் பலத்துத் துஞ்சிய மாக்கோதை என்பார் தம் மனையாளாம் கோப்பெண்டு இறந்தபோது

2637–2