பக்கம்:கவிபாடிய காவலர்.pdf/22

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

16

சோழன் நல்லுருத்திரனார் இப் புறநானூற்றுச் செய்யுள் ஒன்றே அன்றிக் கற்றார் ஏத்தும் கலித் தொகையில் முல்லைக் கலியாகப் பதினேழு செய்யுட்களையும் பாடியுள்ளார்.

கற்றார் ஏத்தும் கலி என்ற குறிப்பில்லை கலித் தொகைக் கவிகள் சுவைத்தற்கு உரியன என்பதைச் சொல்ல வேண்டுவதில்லை. அத்தகைய கலிக் கவிகளில் சோழன் நல்லுருத்திரனர் அமைத்த சுவைகள் சிலவற்றை நாமும் சுவைப்போமாக.

ஆயன் ஒருவன் தன் கைக்கோலைத் தன் தாடையில் வைத்து நிலத்தில் ஊன்றிப் பிடித் துக் கொண்டு நின்ற கோலத்தைச் சுவல் மிசைக் கோல் அசைத்த கையன் ' என்ற அடியில் கூறியிருப்பதைப் படிக்கும் போது ஆயன் தோற்றம் நம் கண்முன் காணப் பெறு வதைக் காண்க. முல்லை நிலமாதலின் ஆன் இனங்கட்கு அளவு கூறமுடியாது அல்லவா? அத்தகைய பெருவாரியான ஆன் நிரைகளுள் சில கருமை நிறத்துடன் விளங்கிக் கால்கள் மட்டும் வெண்ணிறமுடையனவாய் இருந்தன என்பதையும், சில தம் உடலகத்துப் பல புள்ளிகளைப் பெற்றுப் பொலிந்து இருந்தன என்பதையும் கூறுதற்கு எண்ணிய இப்புலவர் உடற் கருமையும் வெண்ணிறக்காலுமுடைய ஏற்றிற்கு மலையில் இருந்து ஓடிவரும் வெள் ளருவியின் ஒழுக்கினையும், புள்ளியுடைய ஏற்