பக்கம்:கவிபாடிய காவலர்.pdf/23

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

17

றிற்கு விண்ணில் படர்ந்த நட்சத்திரங்களையும் முறையாக உவமை காட்டினர்.

"மணிவரை மருங்கில் அருவி போல
அணிவரம்பு அறுத்த வெண்கால் காரி'

"மீன் பூத்து அவிர் வரும் அநீதிவான் விசும்பு போல
வான்பொறி பரந்த புள்ளி வெள்ளை"

என்பன இவரது வாக்குகள்.

ஆயர்கள் இடையே கொல்லேறு தழுவும் வீர மகனுக்கே தன் மகளைக் கடிமணம் முடிக் கும் வழக்கம் இருந்து வந்தது. இவ்வழக்கத் திற்கு இளங் கன்னியரும் இடம் கொடுத்தனர். தாமும் கோல்லேறு தழுவாத வீரமுடைய ஆயர்களை இப் பிறப்பிலேயே மட்டும் அன்றி, மறு பிறப்பிலும்கூட மணக்க விருப்பம் கொள்ளாராம். என்னே அம் மடமாதர் மன உரம் !

"கொல்லேற்றுக் கோடு அஞ்சுவானே மறுமையும்
புல்லாளே ஆய மகள்"
என்ற பெருமித வாக்கைக் காண்க.

ஆயர்குடி தொன்றுதொட்ட பாண்டியர் குடியுடன் தோன்றிய பெருமையுடையது என்று சோழர் மரபினரான நல்லுருத்திரனார் கூறிய கூற்று கூர்ந்து கவனித்தற்கு உரியது. "வாடாச் சீர் தென்னவன் தொல் இசை நட்ட குடியொடு தோன்றிய நல் இனத்து ஆயர்" என்பர் இப்புலவர் ஏறு. "எஞ்ஞான்றும் நெய் கடை பாலின் பயன் யாதும் இன்று" என்றும்