பக்கம்:கவிபாடிய காவலர்.pdf/24

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

18

இவர் பாலின் பயனைப் பண்படக் கூறியுள்ளார்.

இவரது கவிகளில் பல குறிப்புக்கள் நாம் அறிதற்கு இருந்தாலும், அவற்றை எல்லாம் முழுநூலில் காணுமாறு விடுத்து, இறுதியாக ஒன்றை மட்டும் கூறி இப்புலவரது வரலாற்றை முடிப்போமாக.

ஆயர்கள் கொண்ட நன்னெறிகள் பல. அவற்றுள் ஒன்று தாம் எவ்வளவு பொருளைப் பெற்றாலும் இருமணம் கூடுதல் இல்லை என்ப தாகும். ஏன், உலகமே பெறினும் இருமணம் கூடார் என்க. இதனை எத்துணை அழுத்தம் திருத்தமாக இவ்வரசக்கவிஞர் அறிவிக்கின்றார் பாருங்கள் !

“விரிநீர் உடுக்கை உலகம் பெறினும்
அருநெறி ஆயர் மகளிர்க்கு

இருமணம் கூடுதல் இல் இயல்பு அன்றே”

என்ற வீறுடை அடிகளைக் காண்க