பக்கம்:கவிபாடிய காவலர்.pdf/29

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

23

னர் கவிபாடும் காவலராயும் இருப்பராயின், இவரது புகழைப் புகலவும் வேண்டுமோ? இவரால் பாடப்பட்ட செய்யுட்கள் இரண்டு. அவை புறநானூற்றில் காணப்படுவன. இவரது பாட்டினின்று இவரது ஈரநெஞ்சமும் வீர உள்ளமும் வீறிட்டுத் தோன்றுகின்றன. இவர்பால் இவ்விரு பண்புகளும் உண்டு என் பதை முன்னரும் கண்டனம். ஆனால், அவை புறச்சான்றால் புலனாகிய செய்திகள். இங்கு அகச்சான்றாக இவர் பாடிய செய்யுட்களின் மூலமாகவும் இப்பண்புகள் இவர்க்கு இயற்கை யில் அமைந்த குணங்கள் என்பதை உணரலாம். இவரது வீறு கொண்ட மாற்றத்தினைப் பாருங்கள் : “மெல்ல வந்து எனது நல் அடியை அடைந்து, ‘எமக்கு ஈய வேண்டும்,’ என்று தாழ்ந்து கேட்பராயின், எனது அரசைக் கொடுப்பேன். அது மட்டும் அன்று. இனிய எனது உயிரையும் கொடுப்பேன். ஆனால், தம் வலிகாரணமாக எம் வலியினை அறியாது, என் உள்ளத்தை இகழ்ந்து என்னோடு போரிட வருவராயின், அந்தோ ! அவர்கள் பிழைத்துப் போதல் அரிது” என்கிறார். அவர்கள் பிழைத்தல் அரிது என்பதை ஓர் உவமை வாயிலாக இவர் உணர்த்தி இருப்பதுதான் இவரது நுண்ணறிவுத் திறனை நன்கு விளக்கவல்லதாகும். அமைதியாக உறங்கும் புலியை ஒரு கண்ணிலி இடறுவானாயின், அவன் பிழைக்க வழியுண்டாகுமோ ? தப்பி ஓடுதற்குத் தனி வழிகாணக்-